Pages

திங்கள், 2 மே, 2022

நெகிழியைப் பாடுவேனோ?

 உழைக்கும் --

கைகளைப்  பாடும்  வாயால்  ----- நெகிழிப்

பைகளைப்  பாடுவேனோ?

வாழ்வினைப் பாடும் வாயால் -----  மண்பெறும்

தாழ்வினைப்   பாடுவேனோ?


தாவிடும் பாங்கறியா  ---  நிலைத்துத்

தவிப்புடன்  பரவும்கொடி

ஓவிய மரஞ்செடிகள்  ----  படும்துயர்

கூவி உரைதரவோ?


ஓரிடம் பழுதுபட்டுவிட்டால் தாவி இன்னோரிடம் செல்லுதற்கு மரஞ்செடிகட்கு திறம் இல்லை. விதை கொட்டைகள் மூலமே பின்வருவனவற்றை ( இனி முளைக்க இருப்பன )  நகர்த்த முடியும்..  பாவம் இவை.  இவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

நிலைத்து - முளைத்த  இடத்திலே இருந்துகொண்டு.

ஓவிய -   ஒரு சித்திரம்  போல.

கூவி -  யாவரும் அறிய ஒலி எழுப்பி.

உரை -  எடுத்துச் சொல்லி.

இவை தாவுவதற்கு அரியவை ,  ஆகையினால் தாவரம் எனப்பட்டன. வேறு விளக்கமும் உண்டு.  தாவுதல் என்றால் இடம்பெயர்தல்.

தாவு + அரு + அம் >  தாவரம்.   ( தாவிச் செல்ல [ இடம் பெயர]  முடியாதன )

தாழ் + வரு + அம்  >  தாழ்வரம் > தாவரம் :  உயரமாக முளைக்க இயலாதவை.

இச்சொல் இருபிறப்பி.




நெகிழிப்பை.  PLASTIC BAG



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.