வலதுகையை வீசாத வண்ணத் துடனே
வளர்திட உள்ளத்தர் வன்மைத் ---- தலைவரென.
நின்று தயங்கா நிமிர்நடையர் புட்டினே
என்று பலர்கூறு வார்.
ஒருகையை வீசித்தான் ஒன்றசைக் காமை
பெறுபுகழ்போல் சண்டைசேர் பீடும் ---- ஒருபக்கல்
போரெனினும் ஓர்பக்கல் ஆரமைதி தான்நாடிப்
பார்புகழ்தல் தந்துயர் வார்.
போர்மற மன்னரெனப் போற்றும் உயர்விலும்
நீர்நிலம் சூழமைதிப் பேராளாய்ச் ---- சீருறுதல்
உங்கள் புகழுக் கொருமகுடம் வைத்திடுமே
பொங்கபோ ரின்மைக் கதிர்.
நிமிர்நடையர் - நிமிர்ந்த நடை உடையவர்
ஒன்றசைக்காமை - ஒரு கையை அசைக்காமல் இருப்பது
பெறுபுகழ் பொல்- பெற்ற புகழ் ஒப்ப
பக்கல் - பக்கம்
பீடு - பெருமை
ஆரமைதி - நிறைவான அமைதி
பார் புகழ்தல் - உலகம் போற்றுகை
மற மன்னர் - வீரமிக்க ஆட்சியாளர்
சூழமைதி - சூழும் அமைதி
மகுடம் - சூட்டும் முடி
பேராள் - பிரதிநிதி, பெரிய ஆள்.
போரின்மை - அமைதி, சமாதானம்
சுவைத்து மகிழ்க.
மீள்பார்வை பின்னர்.
உங்கள் கருத்தை அல்லது காண்பனவற்றைப்
பின்னூட்டம் செய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.