நீரில்லா இடத்தினிலே தாகம் போல----ஆசை
நெஞ்சமதில் சிங்கப்பூர் மக்கள் கொண்டார்
பாரெங்கும் செடிப்பசுமை மாணும் முன்னால்---சிங்கை
பகருமொரு பசுநகராம் பாதை கண்டார்.
வீதிகளில் தெருவோரம் ஊர்தி செல்லும் ----- நடு
விரிவாகு எனவெங்கும் பசுமை யாக்கி,
யாதுமொரு வெற்றிடமும் இல்லா வண்ணம் ---செடிகள்
எழுமரங்கள் கொடிகளிவை வளர்த்தி வென்றார்.
குப்பைகொட்டும் வழித்துளையே என்ற போதும் --- மக்கள்
கூட்டெனவே அரசுடனே ஒத்தி சைந்து,
சப்பைநிலை போலியங்கிச் சார்ந்து நின்றார் --- செடிகள்
சட்டிகளில் கொடிகளென எட்டி னார்கள்.
தாகம்: தவி+ அம் > தாவம் > தாபம் > தாகம். (போலித்திரிபு)
தாகம் தவிக்கிறது என்பது பேச்சில் பயன்பாடு.
ஆசை - ஒரு பொருளின் அணுக்கத்தினால் மனத்துள் அசைவு உண்டாதல்.
அசை > ஆசை (முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்)
இதுபோல் திரிந்த இன்னொன்று: சுடு > சூடு.
நடுவிரிவாகு: சாலையின் நடுவில் அமைந்துள்ள விரிந்த ஒரு வாகு.
இந்த வாகிலும் செடி புல் முதலியவை நடப்பட்டுள்ளன.
மாணும் - சிறக்கும்
பசுநகர் - பசுமை நகர்
பகரும் - எடுத்துரைக்கும். ( தகுதியான என்று பொருள்).
குப்பை வழித்துளை - ரப்பிஷ் சூட் என்னும் குப்பைக்கிடங்கு.
கூட்டெனவே - அரசுடன் ஒத்துழைத்தவாறு.
எட்டினார்கள் - அடைந்தார்கள்.
இங்குச் சில சட்டிச் செடிகள் உள்ளன. ஒன்றில் விதைகள் தூவி உள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.