பணம்பெறு இயந்திரத் தின்முனில் பற்பலர்
இணைந்தனர் உரைபரி மாறியே கவன்றனர்
இணக்கறு இலக்கமே அழுத்தியே அட்டையை
குணக்குற இழந்தவர் கூட்டமே காண்கவே.
அகவையும் மிகுதியே அடைந்வர் என்றிடில்
உகப்பொடும் அவர்க்குமே உதவிகள் செய்விரே
மகப்பெறு மணிநல மாண்பினும் தனிநிலை
இகத்தின ரெனவிருந் துழல்பவர் பலர்பலர்.
முனில் - முன்னில். ( தொகுத்தல் விகாரம்)
கவன்றனர் - துன்புற்றனர்
இணக்கறு - பொருத்தமற்ற, தவறான
அட்டை - இட்டுப் பணமெடுக்கும் அட்டை ATM card
குணக்குற - குழப்பமுற்று
இழந்தவர் கூட்டமே- இழந்தவர் பின்னால் கூடிய கூட்டம்
அகவை -வயது
உகப்பு - விருப்பம்.
மகப்பெறு மணிநலம் - மக்களைப் பெற்ற பேறு உடைமை
மாண்பு - சிறப்பு
தனிநிலை இகத்தினர் - இவ்வுலகில் தனியாக வாழ்பவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.