மறத்தலும் கூடுமோ மரஞ்செடி கொடிகளை
அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு
அடுக்குயர் மாடியில் அகஞ்செலும் நலத்திலும்
கொடுக்குபோல் பைஞ்செடிக் கொளுங்கலப் பயிர்செய்வர்
அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு ---
முன் இவர்கள் இருந்த இயற்கையை அடுத்த வளமான வாழ்வு;
அகஞ்செலும் - மனம் ஆழ்ந்திருக்கும்.
நலத்திலும் - வாழ்க்கை நலத்திலும் அல்லது உயர்விலும்
கொளுங்கலம் - செடிவளர்க்கும் கலங்கள்
கொளும் - கொள்ளும். தொகுத்தல்விகாரம்.:
கொடுக்குபோல் - முன்னைப் போக்கிலே போவதுபோல்
இக்கவி தொடுக்கபட்ட விதம்: இரண்டாம் அடியின் நான்காம் சீரும், நாலாம் அடியின் நான் காம்சீரும், புளிமாங்காய்ச் சீர்களாகத் தொடுக்கபட்டன. மற்ற சீர்கள் ஆசிரியத்துக் கிசைந்த இயற்சீர்கள், ஆசிரிய அல்லது வெண்டளை. இக்கவியில் எழும் ஓசை. பிடிக்கிறதா பாருங்கள். பின்னூட்டம் இடவும்.
கண்டு மகிழ்க
. மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.