நோயென்றால் இயலாரை ஏற்றிச் சென்று
நுடங்கிவீழ்ந் திடாதபடி மூச்சைக் காத்தும்,
ஓயாமல் மக்கள்வாழ் வொட்டி நின்ற
உன்னதநல் உயர்வண்டிக் கீடும் உண்டோ.
தாய்ச்சேவை வண்டிஎன்றே இதனைக் கொண்டால்
தக்கதது மொழிஎன்பார் ஒப்புக் கொள்வார்;
போய்வேறே எதைஎதையோ புகழும் மக்கள்
போற்றுங்கள் ஏற்றுங்கள் சேவை தன்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.