ஆராதனை தமிழ் மூலம் சொற்புனைவறிதல்
ஆர்-தல்
: நிறைதல். நிறைவு.
ஆது:
இது ஆவது என்பதன் இடைக்குறை. இங்கு வகரம் குன்றியது.
அன் :
சொல்லாக்க இடைநிலை. இது அண்முதல் என்ற வினையின் திரிபு. அண்முதல் என்பது நெருக்கமாதல். அண் - அன் என்று திரிந்து சொற்களில் வரும். அன்பு என்ற சொல்லில் இது வந்துள்ளது. ஆகவே தமிழில் இல்லாததன்று. அன்பு என்பதில் ~பு விகுதி.
ஐ: தொழிற்பெயர் விகுதி. கலை, மலை, உலை என்பவற்றிலெல்லாம் விகுதியாக வந்துள்ளது. விலை என்பதில் தொழிற்பெயர் விகுதி. இங்கு வினையுடன் மட்டும் சேராமல் பிற பாகங்களும் வந்துள்ளபடியால் இந்த ஐ விகுதியைச் சொல்லாக்க விகுதி என்று மட்டும் குறிக்க.
பொருள்: அணுக்கமாக நின்று நிறைவு செய்யும் ஒரு பூசை. இங்கு அணுக்கமென்றது வழிபடுபொருளுடன் அணுக்கம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.