Pages

திங்கள், 27 டிசம்பர், 2021

அலங்காரம் மகிழும் ஐயப்பசாமி

 இவர்கள் வீட்டில் ஐயப்பனுக்கோ

ஏற்றி வைத்திட்ட இருக்கை;

இனிய வாச மலர்களைத் தூவிப் 

போற்றிக் கவின்பெறு இருகை; 


பற்றில்  செறிந்த  அன்பர்கள் சூட்டிய

பார்புகழ் வெள்ளியில் மகுடம்,
 

சுற்றிக் கழுத்தினில் சுந்தரப் பூக்களில்

சூர்த்தல் தவிர்த்திடும்  மாலை


அன்பொடு  பண்பினில் அன்பர்தம் கைகளால்

ஆசீர் விளங்கிடும்  பொட்டு;

அருகினில் கிண்ணங்கள் அவற்றினுள் வைகிய

சந்தனம் குங்குமம் நீறு.


எல்லாம் உடையவன் நீயே

எங்களுக்கே அருள்வாயே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.