தமிழர் திரைகடலோடியும் திரவியம் தேடியவர்கள் என்பது தமிழர்தம் வரலாற்றினாலும் தமிழர் நண்ணில( மத்திய )க் கிழக்கிலும் சுமேரிய, மெசோபோடேமியா முதலிய இடங்களிலும் காணப்பட்டதாலும், தமிழ்மொழிச் சொற்களுடன் இணையானவை ஆப்ரிக்காவிலும் இன்ன பிற பழங்குடியோர் மொழிகளிலும் அறியப்பட்டதாலும் ஆன உண்மை பற்றிய செய்திகள் கருதத்தக்கவை ஆகும். இலாத்வியா என்னுமிடத்தில் ஒரு சிறுதொகையினர் பேசிய மொழியிலிருந்து இலத்தீன் உரோமப் பேரரசுக்கு செப்பம்செய்யப்பட்டு விரிவு படுத்தப்பட்ட ஞான்று, தமிழகத்துப் புலவர்கள் விளக்குநராச் செயல்பட்டுச் செற்களும் வழங்கியதைச் சென்னைப் பலகலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் தம் ஆய்வு நூலில் குறிப்பிட்டிருப்பதம் இருளில் ஒளியாம் செய்தியே ஆகும். உலகப் பெருமொழிகட்குத் தமிழின் தரவுகள் இன்னும் ஆய்வு செய்யப்படாமலே உள்ளன.
இதன் தொடர்பில் சிங்கம் பற்றிய ஐரோப்பியச் செற்களைத் தமிழ்ச் சொற்களுடன் ஒப்பாய்வு செய்வது ஒரு நல்ல முயற்சியாகும்.
அரிமா சிங்கம் முதலிய சொற்களை ஆய்ந்து அவை சுருங்கிவரும் தொகையினவை ஆனதால் அவ்விலங்குக்கு ஏற்பட்ட பெயரென்பதைச் சுட்டினோம்.
ஆங்கிலத்தில் வரும் லயன் என்ற சொல்லையும் அதற்கான மற்ற ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சொற்களையும் காணுங்க்கால், அவையும் சிங்கமெனும் விலங்கு அருகிவருதல் எனற்பாலதையே சொல்லமைப்புக் கருத்தாக நமக்குக் காட்டுவதாய் உள்ளது. அருகுதல், சிங்குதல், இல்லையாதல் --- இறங்குமுக நிகழ்வுகளாதலின் ஒரியல்பினவாம்.
சிங்கங்கள் ஐரோப்பியக் கண்டத்தில் இலவாயின
பழைய ஃப்ரீசிய மொழியில்: இலவாயின - இலாவா.
இடை டச்சு மொழியில்: இலவாயின - இலவே
பழைய ஜெர்மன் மொழியில்: இலவாயின - இலவோ.
ஸ்லவோனிக்: இலவாயின - லிவ்வு
செக் மொழியில் இலவாயின் - லெவ்
பழைய ஐரிஷ் - இலவாயின் - லெயோன்
இவ்வாறு நோக்குங்கால், இல் என்ற அடிச்சொல்லுடன் தொடர்பு கொண்டவையாகவே ஐரோப்பியச் சொல்வடிவங்கள் உள்ளன. யாரும் ஒத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக எதையும் நாம் சொல்வதில்லை.
மாறுபாடு வருமிடங்களைச் சொல்வதிலேதான் நமக்கு மனமகிழ்ச்சியே வருகிறது.
ஐரோப்பாவில் சிங்கங்கள் இல்லையாகிவிட்ட நிலையைத்தான் -----
இல்லை > இல்லையோன் > லையோன் > லயன் என்பவை அடியொற்றிவருகின்றன.
இலக்கியத் தமிழிலே சொன்னால் சிங்கங்கள் இல்லவை (தமிழ்) ---லவை -- லபை, லவை. ---- இவை எகிப்திய வடிவங்கள்.
சிங்கம் பற்றி வினவிய காலை எந்தத் தமிழன் இல்லை என்று சொன்னானோ, அந்தச் சொல்லே சிங்கத்துக்கும் பெயராய் அங்கு உலவுவது, மகிழத்தக்க செய்திதான்.
அருகுதல் ( குறைதல் ), சிங்குதல், இல்லையாதல் என்பவையே --- சிங்கங்கள் குன்றிய -- குறுகிய நிகழ்வைக்கொண்டே, அவற்றுக்குப் பெயரும் வந்துள்ளது என்பது யாம் இதன்மூலம் அறிந்துகொண்டது ஆகும். எம்போலவே எல்லாரும் சிந்திக்கவேண்டுமென்றால் எல்லாரும் சிவமாலா ஆகிவிடுவர் என்பது உண்மையாகிவிடும். மாறுபட்டுச் சிந்திப்போர் நம்மிலும் மேலானவர்கள். எதிலும் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை. சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடன்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.