இன்று திரு ரூபன் அவர்களின் பிறந்தநாள். அவருக்கு நம் வலைப்பூவின் வாழ்த்துக்கள் உரியவாகுக. ஆனால் கோவிட19 காரணமாக யாரையும் கூப்பிடவில்லை. "கேக்" என்று சொல்லப்படும் இன் திண்ணப்பம் சாப்பிடலாமென்றால், ஒன்று வாங்கிவந்தால் அதைச் சாப்பிட்டு முடிக்கமுடியாது. சீனிமயமாக வேறு இருக்கும். ஆதலால் பீசா எனப்படும் சைவப் பிசைப்பொதிவு உண்டுகளித்தோம். பின்னர் தேனீர் (கொழுந்துநீர்) அருந்தி சிவமாலாவுடன் விழாவைத் திரு ரூபன் முடித்துக்கொண்டார். இந்தத் தொற்றுப் படையெடுப்பு மட்டும் இல்லையென்றால் ஓர் ஐம்பது பேர்களை அழைத்துக் கொண்டாடுவதாக இருந்தோம். கிருமியால் பாதிக்கப்பட்டோர் தொகை ஏறிக்கொண்டிருக்கிறது. இறங்கி அடங்குமா என்று தெரியவில்லை. கிருமித்தொல்லை ஒழியத் தொழுவோமாக. " தொழுவாரவர் துயராயின துடைத்தல் உனகடனே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளது நினைவுக்கு வருகிறது. (மேற்கோளில் வேறுபாடு காணின் பின்னூட்டம் இடுங்கள்.) ( மூளையும் உடலும் களைத்துப் போய் உள்ளது) மன்னிக்கவும். நம்மை இறைவனே காக்கவேண்டும்.
பிசைப்பொதிவு நன்றாகவே இருந்தது. அதை நாங்கள் இருவரும் உண்ணுமுன் எடுத்த அவ்வுணவின் படம் இங்குள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.