இதுபோழ்து மார்த்தாண்டன் என்பதைப் பார்த்து, பின்னர் பூபதி என்பதையும் மற்றோர் இடுகையிற் காண்போம்.
மருவுதல் வினைச்சொல்.
மரு என்பது பகுதி. வு என்பது வினையாக்க விகுதி. ~தல் என்பது தொழிற் பெயர் விகுதி என்பது நீங்கள் அறிந்ததே.
மரு > மார்.
இதுபோல் திரிந்த வேறு சொற்கள்:
கரு > கார் > .. (கார்காலம், கார்மழை, கார்த்திகை.)
ஓரு > ஓர் .. ( எண்ணுப்பெயரும் இவ்வாறே திரியும்.
இரு > ஈர். .. ( இரண்டு என்ற எண்ணுப்பெயர் )
பெரு > பேர் .. ( உயிர்வரத் திரிதல், பெரு ஆசான் - பேராசான்)
துரு > தூர் ... ( எதையும் துருவிச் செல்ல, இறுதியில் அல்லது அடியில் ` இருப்பது தூர்
பரு > பார் (பருவதத்தின் அரசி பார்வதி )
மார்த்து - மருவுதல் உடையது என்று பொருள்.
பிற அரசர்கள் வந்து ஒரு பெரிய அரசனைத் தழுவிச் செல்வர். அது அடிபணிதலோ, கப்பம் கட்டுதலோ என, ஏற்புடையவழி நடைபெறும்.
ஆகவே, மரு > மார் > மார்த்து.. ( மருவுதல் , மருவித்தல் என்று தன்வினை பிறவினைகளை அறிந்துகொண்டால், மருவித்து என்பதன் திரிபே "மார்த்து" என்பதறிக. மற்றவர்கள் தன்னைத் தழுவி அரசு நடாத்துமாறு இயங்கிப் புகழடைந்தவன் )
ஆண்டன், ஆண்டவன், ஆண்டான், ஆண்டி என்பன ஆள்தல் அடிபடையில் எழுந்த சொற்கள். ஏற்புடையவாறு அரசனையும் கடவுளையும் குறிப்பன
மார்த்து ஆண்டன் > மார்த்தாண்டன்.
பிற பின்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.