வீட்டிற்குள் செருப்பு அணியும் வழக்கம் தமிழரிடை இல்லை. அது பிற இந்தியரிடமும் இல்லை என்றே தெரிகிறது. ஆகையினால் எங்காவது செல்லும்போது அணிவதுதான் செருப்பு.
செல்லுதல் - வினைச்சொல்.
செல் > செரு > செரு + பு > செருப்பு.
ஒப்புநோக்கு: செல் - செரு, புல் - புரு.
புல்லுதல் - வினைச்சொல். பொருள்: பொருந்தியிருத்தல்.
புல் > புரு > புருவம். விகுதி: அம்.
[ சொல்லமைப்புப்பொருள்: கண்களுடன் பொருந்தியிருக்கும் முகப்பகுதி ]
புல் > புரு + டு + அன் > புருடன்.
[சொல்லமைப்புப்பொருள்: வீட்டில் பெண்ணுடன்
பொருந்தி வாழ்கிறவன்.]
இன்னும் பல உள. பழைய இடுகைகளிற் கண்டு பட்டியல் இட்டுக் கொள்க.
இச்சொல் ( செருப்பு ) ஒரு இருபிறப்பி.
சேர் -- வினைச்சொல்.
சேர் > சேர்+ பு > செரு+ பு > செருப்பு.
இது முதனிலை குறுகிய தொழிற்பெயர்.
(காலுடன் சேர்ந்திருப்பதான அணி.)
இதுபோல்வது இன்னொரு சொல்: முதனிலைக் குறுக்கம்.
சா - வினைச்சொல்.
சா + வு + அம் > சவம் ( பிணம்). சா> ச.
அம் விகுதி, வு இடைநிலை.
சா என்பது முதனிலை வினைமுற்றிலும் குறுகும்.
சா> சத்தான் ( திரிபு: செத்தான் ).
மலையாளம்: சத்துபோயி.
ஒரு விலங்கு கொல்லப்பட்ட பின் அதை சாறுவைத்துக் குடிப்பது சத்து என்று பண்டையர் நினைத்தனர். வேர் முதலியவற்றுக்கும் இது பொருந்துவது.
சா + து > சத்து. து தொழிற்பெயர் விகுதி.
இவ்வாறு து விகுதி பெற்ற இன்னொரு சொல்: விழு > விழுது.
சில கூடுதல் விவரங்கள்:
சாறு என்ற சொல்லும் சாதல் வினையிற்றோன்றியதே. ஒரு வேரைப் பிடுங்கி வேவித்தால் அது இறந்துவிடுகிறது. விகுதி: று.
சாறுதல் என்ற வினையும் உள்ளது. வழுக்குதல் என்ற பொருள். கொல்லப்பட்ட , இறந்த அல்லது வெட்டுண்டவற்றிலிருந்து வழியும் சாறு வழுக்குதலால் இப்பொருள் ஏற்பட்டது. ஆகவே பொருள்: வழுக்குதல்.
பு விகுதி வலிமிகாமலும் வரும். உயர்பு. ஒழிபு.
மார்பு ( மரு> மார்> மார்பு: நெஞ்சுப் பகுதியை மருவி நிற்கும் உறுப்பு).
மார்பு என்பதில் வலி மிகவில்லை. அதுபோலவே அமைபு என்று மிகாமலும் வரும். இவ்வாறு வருவது அமையும் இயல்பும் இலக்கணமும் உடைமையைக் காட்டும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.