தம்மில்தாம் மனம்பதிந்து
தம்பதிகள் தாம் இணைந்து
செம்மகிழ்வில் நனிநெகிழ்ந்து
சேர்ந்தயலார் கரையணைந்த
மம்மரிலா மண இணையர்
நமர்புகழும் ஓர்மனையர்
திருமதி ரோஷினி பிறந்த நாளில்
அவருக்கும் கணவர் பிரகாஷுக்கும்
எங்கள் வாழ்த்துகள்.
தம்மில்தாம் மனம்பதிந்து - தாம் மனவொற்றுமையுடன்,
தம்பதிகள் - இவ்வாறு மனம் பதிந்து "தம்-பதி"களாக இணந்துவிட்ட,
செம்மகிழ்வு - சீரான மகிழ்ச்சி.
நனி - நன்மையான, நெகிழ்ந்து - அன்புகொண்டு
அயலார் கரை அணைந்த - அயல் நாட்டில் சென்று வாழும்,
மம்மர் இல்லா மண இணையர் - தம்முள் பேதமற்ற திருமணம் ஆன
சோடிகள்,
நமர் புகழும் - நம் உறவினர் நட்பினர் உயர்த்திப் பேசும்,
ஓர்மனையர் - இல்லறவாசிகள்.
இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து என்றபடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.