அறுசீர் விருத்தம்
வேலை இல்லை என்றால்
விழைந்தன செய்தல் கூடும்;
காலை மாலை நன்றே
செயவோ தடையே தையா!
சோலை அகத்துச் சென்று
நாயைச் சிறைத்தல் நன்றோ?
வாலாம் சிறுவன் போல
வந்ததைச் செய்தல் வேண்டா.
உரை: விழைந்தன செய்தல் -- தனக்கு விரும்பியதைச் (எதையும்) செய்வது , கூடும் - இயலுவதே; காலை மாலை நன்றே செய்யவோ தடை ஏதையா -- காலையாயினும் மாலையாயினும் விரும்பிய நல்லதையே செய்வதற்குத் தடைகள் இல்லையாம்; ஐயா - விளி; சோலை அகத்துச் சென்று நாயைச் சிறைத்தல் நன்றோ - மரம் செடி கொடிகள் வளர்ந்து உலவ ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நாய்க்கு முடிவெட்டுதல் நன்றோ? நல்லதன்று; வாலாம் -- அடங்காத , சிறுவன் போல, வந்ததை - நினைப்பில் தோன்றுவதையெல்லாம், செய்தல் வேண்டா(ம்), என்றவாறு.
Man shaves dog at S’pore walkway, gets called out for ‘irresponsible behaviour’
Pl click for news::-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.