மற்றபல பேச்செழுத்து மாண்பின் கற்று
வந்ததனால் வந்ததிகழ் வரவு தன்னால்
பெற்றதமிழ் தன்னைமிகப் பேண எண்ணிப்
பெருக்கிடுமோர் பெய்முகிலாய்ப் பிறங்கும் இந்த
உற்றசிவ மாலைதரு வலைத்த ளத்தை
உங்கள்நறும் பித்தைமணி யாகச் சூடும்
பற்றுளமே பயனூறிப் பயில்க வாழ்வே.
பரந்துலகத் தமிழ்துலங்கும் பரிதி வாழ்வே.
அரும்பொருள்
பல பேச்செழுத்து - பல மொழிகள்.
மாண்பில் - நல்லபடியாக.
கற்று வந்ததனால் -- கற்றுப் பெற்ற அறிவால்
வந்த திகழ் வரவு - பெற்ற வருமானம்
தன்னால் - அதனால்.
பெற்ற தமிழ் தன்னை - இத் தாய்மொழியாகிய தமிழை
பேண எண்ணி - வளர்க்க எண்ணி,
பெருக்கிடுமோர் - வளர்த்திடும் ஒரு
( ஓர் என்பது ஒரு என்று இங்கு வரத்தேவையில்லை. இது கவி )
பெய் முகிலாய் - மழை பெய்யும் மேகம் ( போல)
பிறங்கும் - ஒளிவீசும்,
உற்ற சிவமாலை தரு - உள்ளுறவு பூண்ட சிவமாலா தருகின்ற
வலைத்தளத்தை ---
உங்கள் நறும் பித்தை மணி - உங்கள் தலையில் அணியும் ஒரு
முடி மணியாக, [ பித்தை - முடியணி தங்கப் பிடிப்பு.]
தங்கத்தினாலான பிடிப்பு: பிடிப்பு ( ஆங்கிலத்தில் கிளிப்)
சூடும் உளப்பற்று தனக்கு --- நீங்கள் அணிகின்ற உள்ளத்துப் பற்றுதலுக்கு
ஊறி - ஊற்று போல மிகுந்து,
உயர்க வாழ்வே.--- உங்கள் வாழ்வு வளம்பெறுக,
பற்றுளமே பயனூறிப் பயில்க வாழ்வே--- உலகெங்கும் தமிழ்
தழைக்குமானால் வாழ்க்கை மேம்பாடு அடையும்,
பரந்துலகத் தமிழ்துலங்கும் ------ விரிந்து உலகத்தமிழ் விளங்கும்
பரிதி வாழ்வே. --- சூரியன்போல் வாழ்வு ஒளிரும்,
(ஓங்கும் வாழ்வே. )
என்றவாறு.
சிவமாலா தளம் தமிழைப் போற்ற, அதனால் உங்கள் மனம் மகிழ,
அம்மகிழ்வினால் மற்ற துறைகளிலும் நீங்கள் நன்றாகச் செயல்பட,
எல்லாம் மேம்பாடு அடையும் என்பது கருத்து.
உள்ளம் மகிழ்ந்தால்தானே வாழ்வு சிறக்கும் என்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.