ஆண்களின் முகமெல்லாம் கொள்ளை அழகென்றே
ஆண்டவன் நினைத்ததுண்டு----- அதனால்
அதை மறைப்பதும் வேண்டுமென்று ----- அந்த
ஆண்டவனும் நினைத்ததுண்டோ?
அவன்முகம் மறைக்க மீசையும் தாடியும்
ஆண்டவன் கொடுத்ததுண்டு----- இருந்தால்
அவனை விலகிச் செல்வாள் ----- அதனால்
அவள்தன்னைக் காத்துக்கொள்வாள்.
உலகைப் படைத்து முடித்தபின் நோக்கினால்
பெண்பின்னே ஆண் ஓடினான்,
பலவும் அறிந்தவர் சிலவே சிந்தித்தார்
படுதாவைப் போட்டாகிலும் ---- பெண்முகம்
தடுத்தாலே தக்கதென்றார்.
அப்பப்பா உலக நிறுவாகம் என்பது
ஒற்றைத் தலைவலியாய் ----- இங்கு
உண்டாகி விட்டதப்பா.
பின்னே ஓடாமல் முன்னால் போவதே
தன்னைத் தான் காப்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.