இந்த இடம் சுவிட்சர்லாந்தில் உள்ளது. "சாத்தூ டி ஷில்லியோன்"
chatteau de chillon
இது கோட்டையின் வெளியழகைப் புகழும் கவிதை.
----------------------------------------------------------------------------------------
பேராற்றின் கரைபாதி
நீரோட்டம் மருவிமகிழ்
ஊறாத தரைதன்னில்
நேருயர்ந்த நெடுங்கோட்டை. 1
பேராறு - பெரிய ஆறு.
ஊறாத தரை - ஆற்றுநீர் புகாத தரை.
முன்மாந்தர் முடித்துவிட்ட
மண்காணாச் சாளரங்கள்!
தண்காற்று நாள்முழுதும்!
வெண்ணீரில் இரவிமுகமே. 2
முன்மாந்தர்- பழங்கல மக்கள் (ஆட்சியாளர்கள்.)
தண் - குளிர்ந்த
மண்காணா - நீரைமட்டுமே காணக்கூடிய
சாளரங்கள் - சன்னல்கள்
இரவி - சூரியன்
வெண்ணீர் - வெள்ளை நீர்
ஊறிமலைப் புறத்திருந்து
ஓடிவரும் நீரின்மிகை
மீறிவரும் காற்றினிலே
ஆடியகல் சிற்றலைகள் 3
ஆடி
அகல் - ஆடிக்கொண்டு
அகன்று செல்லும்
மீறி - கூடுதலாக
நாற்புறமும் சாய்கூரை
நடுவிலெழும் கூர்முகமே
மேற்புறத்து நெடுங்கூடு
கொடும்புயலில் மடங்காது. 4
இது ஓர் எழும் கூடுபோன்ற கட்டிட அமைப்பு
இது மேற்பறந்து பார்க்கையில் தெரியும் காட்சி
உலாவருவோர் தங்குதலை
வளாகமெனில் கலாச்சுவையே..
எலாயிரவும் நிலாவெனவே
சொலாமகிழ்வு மெய்துவரே. 5
தங்கு - தங்கும்.
தலை வளாகம் - தலைமையான கட்டிடம்.
எலாயிரவும் - எல்லா இரவும்.
நிலா - சந்திரன்.
சொலாமகிழ்வு - சொல்லவியலாத ஆனந்தம்.
எலாயிரவும் ( இல்பொருள் உவமையின்பால்படும்)
கலாச் சுவை - கலையழகு தரும் இரசனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.