மழைத்தூர்ந்து நெருங்கிய மால்நிறத்தின்
முகிற்கூட்டம்
இழைத்தார்ந்த இடுவிரை வாலெடுத்தேன்
உலராடைகள்
நனைத்தோய்ந்து செலுமுகில் நான்படுவேன்
அதற்கென்ன
நினைத்தோய்ந்து நிலைகொள வைத்தனைநீ
நின்மலனே.
இதன் பொருள்
மழைத்து ஊர்ந்து --- மழை வருவதுபோல் சுற்றுச்சார்புகள் குளிர்ந்து,
நெருங்கிய மால் நிறத்தின் - வானில் கிட்ட வந்த கருநிற முடைய;
முகிற்கூட்டம் --- மேகப் பெருந்திரள்கள்;
இழைத்து ஆர்ந்த ---- உண்டாக்கி நிறைவுசெய்துவிட்ட;
இடு விரைவால் - என்மேல் ஏற்படுத்திய (என் செயல்) வேகத்தால்;
எடுத்தேன் உலராடைகள் -- ஓடி அகற்றினேன் உலர்ந்துகொண்டிருந்த ஆடைகளை;
நனைத்து ஓய்ந்து செலும் முகில் - எடுக்காவிட்டால் துணிகளை நனைத்துவிட்டு
சிறிது நேரத்தில் பொழிதல் ஓய்ந்து முகில் அப்பால் எங்கோ போய்விடும்;
அதற்கென்ன நான் படுவேன் - அந்த முகிலுக்கு என்ன நட்டம்; அவற்றை மீண்டும் காயவைக்க நான் அன்றோ முயற்சி மேற்கொள்ள வேண்டும்?
நினைத்து ஓய்ந்து - ( எடுத்த பின்னர் ) இப்போது இருந்து சிந்திக்குமாறு செய்து,
நிலைகொள வைத்தனை நீ - இறைவனே, நீதான் தீர்மானிக்கிறாய் என்பதில்
ஒரு மாற்றமில்லை என்று நிலைநிறுத்தினாய்,
நின்மலனே - குற்றமொன்றும் இல்லாதவனே.
நிர்மலன் - விளக்கம்: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_11.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.