( ஒரு பற்றன் அம்மனிடம் வேண்டுவது. இங்குக்
கடைக்கணித்தல் என்ற பதம் பயன்பாடு காண்கிறது).
அம்மா-க டைக்கணிப்பாய் அணைத்துக்கொள் என்னை;
ஆண்டருளே நோயினின்றே அகலவெனை வைப்பாய்!
இம்மா-நி லத்தவர்கள் தும்முதல்செய் கின்றார்
இருமுகிறார் ஈயென்ன சளியைவழிக் கின்றார்
சும்மாவே வீட்டினிலே வைகுதலைச் செய்யார்
சுற்றிவரு கின்றவரைச் சுருட்டியிருத் திட்டால்
எம்மாநோய் என்றிடிலும் எனையணுகல் மேவா(து)
இதைஎனக்கு நயந்திடுவாய் இடறலறச் செய்யே.
அரும்பொருள்:
அம்மா கடைக்கணிப்பாய் - அம்மா கடைக்கண் பார்ப்பாய்
அகலவெனை - அகல என்னை
இம்மா நிலத்தவர் - நாட்டினர்
ஈ என்ன - ஈ என்ற ஒலியுடன்,
வைகுதல் - தங்குதல் ஓரிடத்து;
சுருட்டி இருத்திட்டால் -- சுருட்டி இருத்து, இட்டால்
எம்மா நோய் - எவ்வளவு பெரிய நோய்
நயப்பதிலே - தருவதிலே.
இடறலற - நான் இடறுதல் இல்லாமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.