இத்தனை பேருக்குக் கொரனா என்றால்
எவரும் அணிந்திலரோ ---- முகத் தடைத் துணி?
இத்தனை பேர்கள் இறந்தனர் என்றால்
எத்தனை பேர்கள் உண்டனர் மருந்துகள்? -----தினமும்?
இந்திய நாட்டின் கணக்கினைப் பார்த்தால்
யாரும் படவில்லையோ சிறு கவலை?
யாவரும் மகிழ்ந்துகூத் தாடுதல் போன்ற
காத்தல் நினையாமை கடுந்துயர் தோன்றும்.
முகத் தடைத்துணி- முகக் கவசம்.
காத்தல் நினையாமை - காத்தல் நினையாமையால்.* ஆல் உருபு தொக்கது.
Admin note: This is a new style poem. Not a traditional one.
*Edited: 05052021 2124hrs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.