தசை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.
இது தை என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது. இச்சொல்லின் இறுதியில் உள்ள சை என்பது விகுதி. இதனை மேலும் பிரித்து இரண்டு சிறு விகுதிகளைக் கண்டுபிடிக்கலாம் அவை சு+ ஐ என்பன, இரண்டையும் இணைத்து ஒரு விகுதியாகக் கூறினாலும் சு என்பது இடைநிலை, ஐ தான் விகுதி என்றாலும் ஆவதொரு தெற்றில்லை என்றறிக.
தை > தைவருதல் : தடவுதல்.
தை > தைலம் : தடவும் எண்ணெய் அல்லது நீர்ப்பொருளான மருந்து அல்லது நெகிழ்களிம்பு.
தைத்தல் - இணைத்தல்.
தை - தையல்: துணிகளை நூலால் இணைத்தல்.
தையல் - வீட்டுடன் இணைந்திருப்பவள், என்பதே அடிப்படையான பொருள். இன்னொரு வீட்டிலிருந்து பெண்வீட்டில் வந்து இணைபவனே மாப்பிள்ளை. அதனால்தான் திருமணத்தின் முன் பெண்பார்க்கப் போவது வழக்கில் வந்தது. பெண்வழி வாழ்வுமுறை மாறிவிட்டாலும் இந்த எச்சங்கள் தொக்கி நிற்கின்றன.
இணைத்தல் தடவுதல் எல்லாம் தொடுதல் வகைகள்.
தைமாதம் என்பது இணைக்கும் மாதம். மக்களையும் அவர்கள் நடாத்தும் நிகழ்வுகளையும் இயற்கை நலங்களையும் ஒருங்கிணைக்கும் மாதம்.
தடவுதல், இணைத்தல், பொருந்துதல் என்று தை என்பதன் அடிப்படைக் கருத்தை அறிந்தோம். இனித் தசை எனற்பால சொல்லைக் காண்போம்.
தை > தை+ சை ( சொல்+ விகுதி) > தசை. ( இது ஐகாரக் குறுக்கச் சொல்லமைப்பு).
இன்னொரு வழியில்:
தை > தய் > தசு > தசை. ( தசு+ ஐ).
இது பை > பய் > பயன் (பையன்) > பசன் ( பசு+ அன் ) > பசங்க (பேச்சு) போல்வது ஆகும்.
பசன் என்பதை பசுமை + அன் = பசன் என்று காட்டினாலும் அதே. பசுமை, இளமைக் கருத்தில் அங்கே ஒளிந்துகொண்ண்டுள்ளது. உணரும்படியாக இவண் வெளிக்காட்டப்படுகிறது.
தை > தைச்சு > தச்சு. தச்சுவேலை என்பது மரங்களை அறுத்து இணைக்கும் வேலை. இணைப்பதே அடிப்படைப் பொருள். தச்சு என்பதும் ஐகாரக் குறுக்கம்.
தை > தய் > தயிர். இர் விகுதி. பாலில் ஏற்படும் இணைப்பு.
இவ்விதிப்படி திரிந்த இன்னொரு சொல்: மை > மய் > மயிர். இர் விகுதி. இன்னொன்று: பை > பய் > பயிர்.
சொல்லை ஆய்வு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் இதனைப் பட்டியலிட்டு மனனம் செய்துகொள்க.
உடலில் ஏனை உள்ளுறுப்புகளுடன் இணைந்திருப்பதே தசை.
அறிக மகிழ்க.
செப்பமிடு மீள்பார்வை பின்னர்.
பிற்குறிப்பு:
தயங்கு என்பது தங்கு அங்கு என்ற கருத்துக்களின் ஒன்றுபாடாக வந்த சொல்லே ஆமென்க. த என்பது தன்மை. தன்மை இடத்தில் கு : சேர்ந்திருத்தல். கு என்பதை விரிவாக முன் ஆய்ந்துள்ளோம். தம் என்பதும் வேறன்று. அவற்றை மறுநோக்கு மேற்கொள்க. தன் + கு = தங்கு. தன் இடத்தில் இருப்பதே மேலானது என்று கருதிவிட்டால் அதுவும் த+ ஐ, அல்லது த+ இயை = தயை ஆகும். [ ஐ என்பது மேன்மைக் கருத்து. ] மேற்சென்று போரிடுதல் துரத்துதல் என இல்லாமல் இருக்குமிடத்தில் இயைந்துவிடுதல். ஒரு வீரன் சீறிப் பாயாமல் இரங்கித் தன் நிலையிலே நின்றுவிட, அது தய , தயை என்று வந்துவிடுகிறது. அப்போது அது இரக்கம் என்று கூறப்படும். இவ்வாறு தயவு, தயை, தங்கு, தயங்கு என்ற சொற்பின்னல்கள் எழுதலை கூர்ந்துணர்ந்து மகிழ்க.
த - தன்மை அல்லது தன்னிலையில்,
அ - அங்கே நின்றுவிடுதல்.
த + அ = தய. இவ்விடத்து யகர ஒற்று (ய்) உடம்படு மெய்.
தயங்கு, தயவு, தயை எனச் சொற்கள் அமைதல் காண்க.
பண்டை மொழிமாந்தனுக்கு ஒருவன் தன்னிலை நீங்கி எதிர்நிற்பவனிடம் நெருங்கினால் அவனை அடிப்பதற்கோ, வெட்டுவதற்கோ முற்படு செயல்; இவ்வாறு தன்னிலை கொள்பவன் அரசனோ அதிகாரியாகவோ இருப்பான். தன்னிலை நீங்காமல் நிற்றல் என்பதே தயை, அதுவே தயங்குதலுமாம். தண்டிக்கத் தயங்குதல். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற தமிழ்நாட்டுப் பழமொழியையும் காண்க. நின்று கொல்லும் - நின்று என்பதுதான் தயை, தயங்கு என்பவெல்லாம். நில் > நிலை. தான் நிற்றல் - தன் நிலை - தன்னிலை. இலக்கணத்தில் தன்மை என்பர். தன்மை உடைய மனிதன் என்பர் சிலர். இதன் கருத்து என்னவென்றால், தன்னிலை நீங்காமல் " தயை" யுடனும் "தயக்கத் "துடனும் ( இரங்கி ) நடந்துகொள்வோன் என்பது. தெய்வம் நின்று கொல்லக் காரணம், இடையில் மனிதனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு அளிப்பதற்காகவே என்பர். அன்றை மாந்தனின் கருத்துகளின் ---நிலைமைகளின் அடிப்படையில் சொற்கள் உருக்கொண்டன.
தயாநிதே - தயங்கி நின்றோனே ; நி தே - நில் + து + ஏ > நி து ஏ. தயை செய்தோனே. நில் > நி ஆனது கடைக்குறை.
நிதி என்ற சொல் மாந்தனை அல்லது கடவுளைக் குறிக்கையில் அது திணைப் பிறழ்ச்சி ஆகிறது. து என்பது அஃறிணை விகுதி. மூலத்தில் தமிழிலிருந்து புறப்பட்டதாகக் காட்டினாலும், இலக்கணம் பிறழ்ந்ததால் அது தமிழென்று ஒப்பார் தமிழ்ப்புலவர் சிலர். இது இங்கு திணை விகுதி அன்று, சொல்லாக்க இடைநிலையே என்று கொள்ளின், இத்தடை இருக்காது. வேறு விளக்கங்களும் உள்ளன. எ-டு: து என்பதன்று, த் என்ற இடைநிலை என்பதுமொன்று. இத்துடன் நிறுத்துவோம்.
Classification should be based on a word's functionality and not form.
---- என்பவை அறிக.
தமிழில் தெரிந்துகொள்ளவேண்டியது அனந்தம். ( எல்லை இல்லை). இயன்ற மட்டும் எழுதுவேம். மேலும் அறிவோம் பின்.
உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் செய்யலாம்.
மெய்ப்பு பின்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.