பங்குனி உத்திர மென்றால் --- நம்
பாரெங்கும் வந்திடும் வேல்முரு கன் தனை,
தங்கிடு வீட்டிலென் போமே --- ஒளித்
தங்க நிறத்தட்டில் உண்டிடச் சொல்வோம்.
உறவினர் நட்பினர் வந்து ---- உடன்
உட்கார்ந்தும் நின்றுமே சாமிகும் பிட்டுத்
திறமுடன் செய்யலங் காரம் --- கண்டு
தீராத பற்றொடும் சேர்ந்தாடி உய்வார்!
வள்ளி யுடன்வடி வேலன் --- வர
வாசலி லும்வரை ஓவியக் கோலம்
சொல்லவும் கூடுமோ சூழல் --- எல்லாம்
சுந்தர மாக்கிடும் உந்தும் மனத்தில்.
பங்குனிப் பங்கினைச் செய்வோம் --- பால்
பொங்கிடும் மாலைகள் எங்கணும் பூக்கள்
தங்கி மணந்தரும் வாழ்வும் ---- அணி
மங்கலம் மாட்சி மனைமுழு தோங்கும்.
படம் : உதவியவர் திரு கருணாநிதி ஜீ.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.