ஆங்கில மொழியில் "டெய்லர்" என்ற சொல் எப்படி உண்டானது என்பதை நம் ஆங்கில ( இந்தோ ஐரோப்பிய) மொழி வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் ஆய்வினில் டைலர் என்ற ஆங்கிலச் சொல் "பிளவு செய்தல் " [ Modern French tailleur), literally "a cutter," from tailler "to cut," from Late Latin or old Medieval Latin taliare "to split" ] என்பதிலிருந்து வந்ததாக மொழிவல்லுநர் முடிவுக்கு வந்ததாக எழுதியுள்ளனர். ஆனால் இவர்கள் இந்தச் சொல்லைத் தேடிப்பிடித்ததற்குக் காரணம் உண்டு. அதை அவர்கள் குறிப்பிடவில்லை. இதன் உண்மைக் காரணம், வேட்டி என்ற சொல் வெட்டுதல் என்பதிலிருந்து தமிழில் வந்துள்ளது. துணி என்ற சொல் துணித்தல் ( துண் > துண்டு; துண் > துணி ) என்பதிலிருந்து வந்துள்ளது. இதை மனத்துக்குள் பின்புலமாக வைத்துக்கொண்டே tailler என்ற வெட்டுதல் கருத்திலிருந்து வந்தது என்று கூறிப்போயினர். தையல்காரன் துணியை வெட்டித்தான் தைக்கிறான். ஆனால் வெட்டுவது என்பது அவன் தைப்பதற்கு மேற்கொள்ளும் முன்னோடிச் செயலே அன்றி அதன் இறுதிச் செயலன்று. இறுதி நோக்கம் தைப்பதுதான். நீங்கள் டெய்லரைப் பார்க்கச் செல்வது துணியை வெட்டுவதற்கு அன்று. அதைத் தைத்து வாங்குவதற்குத் தான். ஆகவே வெட்டும் செயலானது துணி, வேட்டி என்பதற்குப் பொருந்துமே தவிர, தைப்பதற்குப் பொருந்தாது.
தமிழில் தைத்தல் என்ற வினைச்சொல் இருப்பதை அவர்கள் மறைத்துவிட்டனர். அல்லது ஓர் உள்ளடியாக வைத்துக்கொண்டனர்.
டெய்லர் என்ற சொல், தையல் என்ற தமிழிலிருந்து அமைந்த சொல்.
தையல் > தையலர் > டைலர் ஆகிவிடும்.
அவர்கள் இந்தியாவிற்கு வந்தபின் அமைத்துக்கொண்ட சொல்லே தையலர், அல்லது டெய்லர். தையலர்> தைலர் என்பதில் யகர ஒலி விடுபட்டது.
இச்சொல் ஆங்கிலத்தில் 1832ல் இருந்து காணபட்டதாக அவர்களே சொல்கிறார்கள். தையல் என்ற சொல்லுடன் அர் விகுதி சேர்ந்து அமைத்துக்கொண்ட சொல்லே தை(ய)லர்!!
நாரெங்ஆ என்பது ஓரஞ்ச் அல்லது ஆரஞ்ச் ஆனதுபோலத்தான்.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.