கோவிடென் றெண்ணும் மகுடமுகி நோய்த்தொற்று
மேவிடும் என்னும் அகடுவருத் தச்சமுண்டே!
ஆயினும் உள்ளில் சிவராத்திரி போற்றிடுமே
தாயென மன்னும் சிவதுர்க்கை ஆலயமே.
கோவிடென்றெண்ணும் - கோவிட் என்று அறியப்பட்ட
கணக்கிடப்பட்ட எனினுமாம். முன் வந்த இவ்வகை நோய்கள்
இதற்குப் பெயரிட்ட போது கணக்கிடப்பட்டன என்று அறிக.
அகடு வருத்து அச்சம் - வயிற்றை வருத்திடும் பயம்.
உள்ளில் - கோவிலுக்குள் ( அழைக்கப்பட்டோரை வைத்து)
மன்னும் - நிலைகொள்ளும்.
காணொளி - உதவியவர்: திருமதி சி. லீலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.