குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே... என்பது ஒரு திருக்குறட் பாவின் முதலடி ஆகும். குடம்பை என்றால் கூடு என்று பொருள். இச்சொல்லுக்குப் பிற பொருட்களும் உள.
இச்சொல்லில் குடு என்பதே அடிச்சொல்.
குடு > குடும்பம்.
குடு > கூடு
குடு > குடி
குடு > குடகம். இச்சொல்லுக்கு நாடு என்று பொருள். உயர்திணைப் பொருளாயினும் அஃறிணைப் பொருளாயினும் சேர்ந்திருத்தல் என்பதே இவ்வடியின் அடிப்படைப் பொருள் இவ்வடிக்கு வளைவு என்ற பொருளும் உளது. எடுத்துக்காட்டு: குடா - குடாக்கடல். குடம் : வளைவுப்பொருள். கும்பகோணத்துக்கு குடந்தை என்ற பெயருமுண்டு. இச்சொல்லுக்கும் வளைவு என்பதே அடிப்படைப் பொருள்.
கூடு என்பதும் ஒரு சிறு கொள்கலம் ஆகலாம். குடம்பை என்ற சொல்லை குடம்+ பை என்றும் பிரிக்கலாம். குடம்போலும் பை, குடமாகிய பை என்று பொருள் கூறுதலும் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் புணர, குடப்பை என்று வரும். குடம்+ பாம்பு = குடப்பாம்பு என்பதுபோல. எனவே:
குடு + அம் + பை என்பதே குடம்பையானது. அம் இடைநிலை. பை என்பது விகுதி என்றறிக.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.