அம்மன் - நாம் வணங்கும் இறைவி - இல்லாத இடமே இல்லை ---- வானத்திலும் பூமியிலும் எவ்விடத்திலும் இருப்பவள் அவள். சிலர் அம்மன் என்ன சாதி என்று உசாவுகின்றனர். எல்லாமும் அவளுள்ளே அடக்கமாதலால் எல்லாச் சாதிகளும் அவளுக்குள் அடக்கம். அவள் அறியாத சாதி எதுவும் உலகில் இல்லை. யாவும் ஒன்றாய் அவள் ஆட்சியுள் மாட்சியாய் இலங்குகின்றது.
சுடுகாட்டில் இருக்கிறாளா என்ற கேள்விக்கு, சுடுகாடு சுடாத காடு என்ற பேதமின்றி எங்கும் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஓரிடத்து ஒருமையாகவும் பலவிடத்தும் விரிந்து பரந்து சிறந்தும் பன்மையாகவும் நிற்பவள் அவள். அவளால் முடியாதது ஒன்றுமில்லை.
அவள் கதம்பவனக் குயில். வண்ணப்பூக்களின் வாசக்குயில். பூவனம் சென்று பொறுமையாகப் போற்றுங்கள்.
ஜகதம்ப மதம்ப கதம்பவனப் பிரிய வாசினி.
அவள் மலைமகளும் ஆவாள். சிகரத்தில் தங்குவதால் "சிகரி" என்றும் குறிக்கப்படுபவள்.
சிகரி சிரோமணி துங்க இமாலய
ஸ்ருங்க நிஜாலய மத்யகம்
மேவி நிற்பவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.