கரம் என்பது கை என்று பொருள்படும் சொல்..
சுருங்கச் சொல்வதானால், கை என்பது கர் என்று மாறும்.
அது அம் ( அமைப்பு) என்ற விகுதிபெற்று, கர்+ அம் = கரம் என்றாகும்.
இதுபோல் திரிந்த இன்னொரு சொல்லைத் தெரிந்துகொள்ளுங்கள்.
விர் ( அடிச்சொல்) > விய் ( அடிச்சொல்).
ஒப்பு: கர் > கை.
இந்த அடிச்சொற்களை இவ்வாறு பொருளறிந்துகொள்ளலாம்.
விர்> விரி > விரிதல்.
விர் + இ > விரி, இதில் இ என்பது வினையாக்கவிகுதி.
தல் என்பது தொழிற்பெயர் விகுதி.
விய்> வியன். ( பொருள்: விரிவு).
வியன் என்பது உலகவழக்கில் இல்லை; இலக்கியவழக்கில் உள்ளது.
எடுத்துக்காட்டு:
விரிநீர் வியனுலகு. ( திருக்குறள் சொற்றொடர்).
இதன் பொருள்: நீரால் சூழப்பட்ட அகண்ட உலகம்.
வியல் - விரிவு
விய் : இந்தச் சொல் இன்னும் உலகவழக்கில் உண்டு. ஒரு பொருளை
விய் என்றால் விலைக்குக் கொடு என்பது. ஒரு பொருள் பிறருக்குக் கொடுபடும்போது அது பயன்பாட்டு விரிவாகிறது
இதிலிருந்து விசு என்ற சொல்
தோன்றியது. விசு என்றாலும் விரிவு. விசு> விசி - விசிப்பலகை: உட்கார உதவும் விரிபலகை.
விசு + ஆல் + அம் = விசாலம் ( விரிவு.) விரிவினால் அறியப்படுவது அல்லது விரிவு. ஆல் : இடைநிலை. அம் - விகுதி.
விசு+ அம் = விசுவம். ( வ் உடம்படுமெய்) விரிந்தது, வானம் உட்பட்ட இவ்வுலகம்.
விய் என்பதிலிருந்து வந்த சொற்கள் சில:
விய் > வியாசம், வியாதி, வியாத்தி, வியாபகம், வியாபாரம், வியாபித்தல்,
வியாமம் ( ஒளி, இது பரவுதல் உடையது) இன்னும் பல. இவை நேரம் கிட்டினால் சொல்லப்படும்.
கர் என்ற அடிச்சொல்லிலிருந்து
கர் > கரு > கருவி.
கர் > கரு > கார் > காரியம்
கர் > கரு > கார் > காரணம்
கர் > கரணம் ( செயல், கரணம் போடுவது)
கர் > கரை: நீரோட்டத்தால் அல்லது மனிதனால் கட்டப்படும் ஒரு மண்தொகுதி.
இதுவும் இன்னொரு வழியில் விளக்கத்தக்க சொல்.
கர் > கரித்தல் என்னும் பின்னொட்டு: அதிகரித்தல். என்ற சொல்லில்போல. இன்னும் சுத்திகரித்தல்.
இது கு+ அரித்தல் என்றும் பெறப்படுவதால் இருபிறப்பிச்சொல்.
நீள்வதால் இத்துடன் முடிப்போம். பின்னொரு மேலேற்றுகையில் சொல்வோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.