முன் காலத்தில் ஐயம் இட்டுண்பது ஓர் அறச்செயல் என்று கருதப்பட்டது. இதற்கான அறக்கலயங்களை வீட்டுக்கு வெளியில் திண்ணையில் வைத்திருந்தனர். இரந்து நிற்போரைக் காணின் கலயத்தில் இட்டுவைத்திருந்த அரிசியை அள்ளிப்போட்டு அன்புடன் அனுப்பிவைத்தனர். இந்தப் பாத்திரங்களில் பலவகை அரிசிகளும் கலந்து வைத்திருந்தனர். குறுநொய் (குருணை), பிறவும் இருக்கும். அதனால் இவ்வகைப் பாத்திரங்கள் "கலயம்" எனப்பட்டன.
பாற்கலயங்களும் பயன்பாட்டில் இருந்தன.
ஐகாரம் குறுகி அகர இறுதிபெற்றாலும் அம் விகுதிபெற, யகர உடம்படுமெய் சொல்லாக்கத்தில் தோன்றும்.
கலைத்தல் > கலை > கல > கலயம். கலையம் > கலயம்.
நிலைத்தல் நிலை > நிலையம் > நிலயம்.
கல + அம் = கலயம்
மலை + அம் > மலையம், மலயம். [மலயமாருதம்]
வினை+ அம்> வினையம் > வினயம்.
இல்லை > இலை.
இலை+ அம் > இலயம். (அழிவு). [ இல்லையாதல் ]. லை - ல : ஐகாரக் குறுக்கம். னை - ன என்பதும் அது.
சொல்லாக்கத்தில் ஒரே அடியிலிருந்து வெவ்வேறு இடைநிலைகள் பெற்றுச் சொற்கள் அமையும்.
கல+ அம் > கலயம்
கல+ அம் > கலவம்.
கலம் என்பதே கலயம் என்று வந்தது என்றும் ஆசிரியர் சிலர் கருதுவர். உயிர்மெய்யெழுத்துத் தோன்றுதல்: இவ்வாறு சொல்வதன் கருத்து யாதெனின் கல என்பதே இரு வடிவங்கட்கும் அடி எனல் ஆகும்.
மண் கலந்து, நீரும் கலந்து குழைத்துச் செய்யப்படுவதால், கல+ அம் = கலயம் என்பதுமாம். வெவ்வேறு வகை மட்கலப்பினால் கலையத்தின் தரம் மாறு படுமா என்பது குயவர் பெருமக்களிடம் உசாவி அறிக.
ய ச திரிபு: கலயம் > கலசம்.
வாயில் > வாசல் என்பது எடுத்துக்காட்டு.
முடிமுகி நோய்நுண்மி பரவாமல் காத்துக்கொள்க. (கொரனா)
மெய்ப்பு பின்னர்.
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 01122020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.