ஒத்திடம் கொடுத்துக்கொண்டிருந்த எப்போதாவது ஒன்று, ஒரு என்பவற்றை நீங்கள் நினைத்துக்கொண்டதுண்டா? எங்காவது விரைவாகப் போகமுயன்றபோது இடித்துக்கொளவதுண்டு. இதனால் வீக்கம் ஏற்பட்டால் இப்போது குளிர்க்கட்டி ஒத்திடம் கொடுக்கச்சொல்வார்கள். சுடுநீர் ஒத்திடத்திலும் குளிர்க்கட்டி ( ஐஸ்) ஒத்திடம் நல்லது என்பார்கள். எதற்கும் மருத்துவரின் பரிந்துரைப்படி நடக்கவேன்டும்.
ஒத்தி ஒத்தி இடுவதே ஒத்திடம். (ஒத்தடம் அன்று).
ஒத்திடம் என்பதில் ஒ என்பதே அடிச்சொல் ஆகும். ஒ எனின் ஒன்று.
ஒ என்பதனுடன் து என்ற விகுதியைச் சேர்த்தால் இருவகையாய்ச் சொற்கள் ஏற்படும்.
ஒ + து = ஒத்து > ஒத்துதல். (வினைச்சொல்).
ஒ + து > ஒன்று. அல்லது ஒ > ஒன் > ஒன்று. ஒன்+ து > ஒன்று.
இனி ஒரு மூன்றாவது வடிவமும் தோன்றும்.
ஒ > ஒல் > ஒல்+து > ஒற்று.
ஒல்லி என்ற சொல்லில் ஒல் உள்ளது. இரு இணைகோடுகள் ஒன்றாவதுபோல், பக்கங்கள் ஒன்றாதல் நோக்கிய நெருக்கத்தால் ஒல்லியான தன்மை ஏற்படுகிறது. ஒ என்னும் ஓரெழுத்துச் சொல்லை ( ஒ+த்த) உணர இவ் வரையறவு தேவையாகிறது.
ஒப்பு என்ற சொல்லில் பு விகுதி. இது பெயரும் வினையுமாகும். தொழிற்பெயர் ஒப்பு முதனிலைத் தொழிற்பெயர், ஒப்புதல் விகுதி பெற்ற தொழிற்பெயர்.
ஓங்குதல் என்ற சொல்லில், ஒன்று பிறவின் மிக்குநின்றதே கருத்து. ஒப்புமைக் கருத்து ஈண்டு கரவுகொண்டு நிற்கின்றது. உலகில் ஒரே பொருளாய் அது இருப்பின் ஓங்குதற் கருத்துக்கு வேலையில்லை.
முடிவனவும் ஒருவனுக்கு ஒன்று பின் ஒன்றாக நிகழுதலே பெரும்பான்மை ஆதலின் ஓண்ணு > ஒண்ணுதல் என்பதும் முடிதற் கருத்தைக் கொண்டிருக்கிறது.
ஒ > ஒரு என்பதும், கு என்னும் வினையாக்க விகுதி ஏற்று, ஒருகுதல் ஆகும். இதன் பிறவினை ஒருக்குதல். ஒன்றை இன்னொன்றில் சொருகும்போது இச்சொருகுதலால் இருபொருள் ஒருவித இணைப்பைப் பெறுகிறது. இவ்விணைப்பு ஒருமை உறுத்துவதால், ஒருகு - சொருகு என்பன உறவுடைய சொற்கள். அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாதல் பழைய இடுகைகளில் தெளிவுறுத்திய கருத்து. அவற்றை மீண்டும் வாசித்துக்கொள்க.
ஒருகு > சொருகு.
ஒ.நோ: அமண் > சமண்.
அடு > சடு> சட்டி.
ஒருகு உருவம் > சொருகு உருவம் > (சொரூவம்) > சொரூபம்.
உருவம் > ரூபம்.
உரு என்பதில் முதல் உகரமும் இறுதி உகரமும் தோன்றற் கருத்தின் வெளிப்பாடு.
உரி என்றால் தோன்றி இங்கேயே இருப்பது. ஆகவே உரியது. உர்+இ
ஒர் உ > ஒரு என்பது வேறுபடா முன்னிருத்தல் குறிக்கிறது.
இவை சுட்டடி வளர்ச்சிகள்.
அறிக மகிழ்க
மறுபார்வை பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.