நன்றாக வளர்ந்துவந்துகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு, அதன் வளர்ச்சி நிற்கவோ குறையவோ செய்யுமாயின் அது சீணித்துப் போய்விட்டதென்பார்கள். ஊர்ப்புறங்களில் "வசக்கெட்டு"ப் போய்விட்டது என்று சொல்வதுமுண்டு. இச்சொல் (சீணித்தல் ) இவ்வாறு உருவாயிற்று:
நிற்றல் > நித்தல். என்றாகும். -ற்ற என்பது -த்த என்று மாறுவது பெருவழக்கான திரிபு. ஓர் எடுத்துக்காட்டு:-
சிற்றம்பலம்
சித்தம்பரம் லகரமும் ரகரமாய் மாறிற்று.
இச்சொல் இடைக்குறைந்து:
சிதம்பரம் ஆனது.1
இச்சொல்லின் உருவாக்கத்தை வேறுவிதமாகக் கூறுவோருமுண்டு. ஆயினும்
இதுவே சரியான சொல்லமைப்பு ஆகும்,
நித்தல் என்பது இவ்வாறமைய,3
சீர் + நித்தல் > சீணித்தல்.
சீர்நித்தல் > சீணித்தல் > க்ஷீணித்தல். என்றாம்.
இன்னோர் எடுத்துக்காட்டு:
சீர்த்தேவி > சீதேவி > ஸ்ரீதேவி.
சீர் என்றது சீ என்றானது கடைக்குறை.
வாருங்கள் < வார் + உம்+ கள் > வா( )+( ) ம் + க(ள்) > வாங்க.
வார் > வா. சீர் > சீ.
வாராய், நீ வாராய். வரு+ ஆய் என்பது வாராய் ஆகும்.
வாரீர் வாரீர். என்பதும் காண்க.
எடுத்துக்காட்டுகள் சில தரப்படும். இன்னும் வேண்டின் நம் இடுகைகள் பலவும் வாசித்துக் குறிப்புகளும் கொண்டு போதிக்கவும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
சீர்+வனைதல் > சீவனை > சீவனம் > ஜீவனம்.2
வனைதல் : செய்தல், அலங்கரித்தல் என்பது.
வாழ்நாளைச் சீராக்கிக் கொள்ளுதல்.
சீர் நிற்றலே சீணித்தல் என்றாயிற்று அறிக, மகிழ்க.
குறிப்புகள்
1 பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. பிறரும் கூறியுள்ளனர். எமது
ஆய்வும் இம்முடிவினதே.
2 உயிர் > யிர் > ஜீ. > ஜீவன், ஜீவன. இலங்கை ஞானப்பிரகாச அடிகளார்.
3 வற்றல் > வத்தல். வத்தச்சி என்ற பேச்சு வழக்கும் காண்க.
தொற்றல் > தொத்தல். ( தொற்றிக்கொண்டு நடப்பவன்).
உடற்குறை உடையோர்க்கு முன் காலங்களில் யாரும் அவ்வளவு இரக்கம்
காட்டுவதில்லை என்று அறிகிறோம்.
தட்டச்சுப்பிழைத் திருத்தம் பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.