சொற்கள் திரிபு அடைதல்:
ஒரு மொழியின் சொல் இன்னொரு மொழிக்குத் தாவுமாயின் அது திரிந்து வழங்குவதே பெரும்பான்மை. திரிபு இன்றி வருமாயின் இவ்விரு மொழிக்காரரும் நாவசைவுகளில் ஓர் இயைபு அல்லது ஒத்தியல்வு உடையவர்கள் என்று நாம் எண்ணிக்கொள்ளலாம். தமிழ்ப்பெயர்களை நாவினால் ஒலிக்க நம் மலாய் மக்கள் சீனர்களை விடத் திறனுடையவர்களாக இருக்கிறார்கள். இதைப்போலவே சீனச்சொற்களைப் பலுக்கச் சில தமிழர்கள் தாளம்போட வேண்டியிருக்கிறதன்றோ? கருநாடக இசையை நன்றாகப் பயின்று கீர்த்தனைகளை ஒரு மலேசியச் சீனர் தாளத்துடனுடன் சுரங்களுடனும் பாடுகிறார். இவர் புட்டபர்த்தியிலுள்ள சத்யசாயி மண்டபத்துக்கும், போய் கச்சேரி செய்துள்ளார். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு விதிவிலக்கு என்று சொல்வதில் தவறில்லை. இது ஒரு சிறுபான்மை நிகழ்வாகும்.
சில தமிழ்ச் சொற்கள் ஐ என்ற எழுத்தைக்கொண்டு முடியுமானால் பிறமொழியினர் அதை ஏகாரம் கொண்டு முடிப்பதே இயல்பு. தோசை ( ஐ) எனற்பாலது தோசே (ஏ) என்றே பிறரால் முடிக்கப்படும்.. ஐ - ஏ திரிபைக்
கவனித்துக்கொண்டு எத்தனை சொற்களில் இவ்வாறு திரிகிறது என்று ஆராய்வேண்டும். அவ்வாறாயின் மலை என்பது மலே என்று திரியவேண்டுமே! ஆமாம். Malay என்றே திரிந்து நம் முன்னே ஒரு சொல்லே
இருக்கின்றதே. இனி மாப்பிள்ளை என்பதை மாப்ளே என்றுதான் பிறரால் சொல்லநேரும். உலகில் வகுப்பறையில் மட்டும் கற்று வெளிவருவோன்
செய்யும் ஆய்வு பெரும்பாலும் புண்ணியமற்றது! அகண்ட கலந்துறவாடல் இருந்தாலே இயலும். மூளையின் இயக்கமும் ஒருங்கிணையவேண்டும். இல்லையென்றால் அறிந்து ஒன்றை வெளியிடுதல் இயலாததாகிவிடும்.
சின்னையா என்பதை சின்-னா-யா என்பானாகில் மொழியிடை ஐகாரம் ஆகாரம் ஆகிவிட்டது. கீதை என்று தமிழன் சொல்வானாகில் கீதா, கீத்தா,கீட்டா என்றுதான் பிறன் முயல்வான்.
ஐகாரம் ஏகாரமாதலும் சில சொற்களில் ஆகாரமாதலும் கண்டோம். இனி ஈகாரம் (ஈ) ஏகாரமாதல் காண்போம்.
ஈ > ஏ திரிபு:
தீ என்பது நெருப்பு என்று பொருள்தரும் ஒரு தமிழ்ச் சொல். இதிலிருந்தே நாள் என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் வந்தது ஆசிரியர் ஒருவர் ஆய்ந்துவெளியிட் டிருந்தார். தீ எரியும்போது வெளிச்சம் கிட்டுகிறது. நாள் அல்லது பகலில் சூரிய வெளிச்சம் உள்ளது. ஆதலால் தீ என்பதிலிருந்து டே என்ற நாள்'குறிக்கும் சொல் வந்திருத்தல் பொருத்தம்தான்.
ஆனால் டே என்ற ஆங்கிலச்சொல் பண்டை ஆங்கில மொழியில் (Old English)(OE) "டேக்" என்று இருந்தது. பண்டை செர்மானிய ( Old Germanic ) மீட்டுருவாக்கத்தில் அது "டேகஸ்" என்றிருந்தது.பழைய ஃப்ரீசிய (Frisian ) மொழியில் அது "தி" / " தெய்" என்று இருந்தது. இந்தக் கட்டத்தில்தான் அது தீ என்ற தமிழுடன் பொருந்துவதாகின்றது. ஆனால் மேலை ஆய்வாளர்களுக்கு இதில் வரும் தீ அல்லது "தி" / " தெய்" எங்கிருந்து தோன்றியதென்று முடிவாகக் கண்டு பிடிக்க இயலாமல் அதை " obscure" என்று விட்டுவிட்டனர்.ஆகவே இந்தோ ஐர்ப்ப்பிய மூல மீட்டுருவாக்கத்தில்டேக் என்பதில் உள்ள் டே என்பதை விட்டு, இறுதி"ஏக்" என்பதுதான் ( ட் + ஏக் ) மூலமாக இருக்கலாம் என்றுஊகித்து முடித்தனர். அவர்களுக்குத் தீ என்றதமிழ்ச்சொல் உலகில் இருப்பது தெரியவில்லை.தெரியாதது தொல்லைதான். என்ன செய்வது.
சொற்களை ஆய்வதென்பதும் எளிதானதன்று. தீ என்பதிலிருந்து டே வந்ததென்று சொன்ன தமிழா- சிரியர் எப்படி அதை நிலைநாட்டியிருந்தார் என்பது இப்போது எனக்கு மறதியாகிவிட்டது. ஆனால் அவர் முடிவை யான் மறக்கவில்லை. I do not have his book. I read it in a library.ஆனால் இந்தோ ஐரோப்பிய மீட்டுருவாக்கத்தில் (Proto IE) "தியா" என்றால் எரிதல், அதாவது நெருப்பு எரிதல்.
தமிழிலும் அது எரிதல்தான். எரிந்தால் வெளிச்சம். வெளிச்சம் என்பதே பகல். பகல்தான் டே. தீ தான் தியா ஆகி உலவியது. ஆகவே இது ஈ- ஆ திரிபு. தீ என்பதில் உள்ள ஈகார ஈறு திரியாமல் ஆகாரம் வந்திணைந்த எழுத்துப்பேறாயினும் அமைக.
Have a nice day. Take care.
தட்டச்சு மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.