அனவரதம் பிறந்த விதத்தை சுருங்கச்சொல்லி
விளங்கவைக்க முற்படுதல் நன்று. நம் தமிழ்
மக்கட்கும் நோய்நுண்ணுயிர்ப் பரவலால்
வாசிக்கக் கிட்டும்நேரம் குன்றிவிட்டது.
அனவரதம் என்றால் அனைத்து நாளிலும்
வருவது.
அனை - அன.
வரு (வது) - வரப்பெறுவது: வர.
து - ஒன்றன்பால் விகுதி, இங்கு வருபொருள் குறித்தது.
இதனைச் சொல்லாக்க இடைநிலை எனினுமாம்.
அம் - அமைதல் குறிக்கும் விகுதி.
அன + வர + து + அம் : > அனவரதம்.
அம்மை என் மனத்துள் அனவரதமும் பொருந்தி நிற்கின்றாள்
என்ற வாக்கியத்தில் இச்சொல்லின் பயன்பாடு காண்க.
இச்சொல் அமைந்த காலத்தில் புதிய சொல். இன்று இது
பழைய சொல்லே. நன்கு திரித்து அமைக்கப்பட்டுள்ளது.
அறிக மகிழ்க.
குறிப்பு:
( இது பெயர்களிலும் வருவதுண்டு. எ-டு:
அனவரத விநாயகம்.)
விநாயகம் : வி+ நாயகம்; மற்றும் வினை+ஆயகம்.
ஐகாரம் குன்றி வினாயகம் ஆம்.
வி நாயக என்பதில் வி என்பது விழுமிய என்று
பொருளாம். வி முன்னொட்டு என்பாருமுளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.