பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே
இன்றெழுதிக் கிட்டுவதோ இனிமை இலாச் சொல்லே
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும் பின்னே.
இதன் பொருள்:
முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே:
மூன்று நாட்களுக்கு முன்பு யாம் இடுகை ஒன்று
உங்களுக்காக இட்டிருந்தோம்;
பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே--
அதன்பின் யாம் எழுதியவை எல்லாம் எம் சொந்த
வேலைகளை முன்னிட்டு; அதனால் அவை
மக்கள் படிக்கத் தக்கவை அல்ல;
இன்றெழுதிக் கிட்டுவதோ இனிமை இலாச் சொல்லே-
இன்று ஒன்று எழுதப்போகிறோம்; அது உங்களுக்குக்
கிட்டும்; ஆனால் அந்தச் சொல்லில் இனிமை எதுவும்
தேடாதீர்கள், இனிமை என்பது இராது.
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும் பின்னே.
நல்லபடியாக எழுதியபின்புதான் அயர்ந்து
உறக்கம் கொள்ளுவோம் என்றபடி.
அதைப் படிக்கத் தயாராய் இருங்கள். நன்றி
மெய்ப்பு - பின்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.