இப்பெயரை இயற்பெயராய்க் கொண்டோர் பலர் உள்ளனர்.
இது சொல்லாய்வே அன்றி வேறில்லை. இப்பெயரைப் பற்றி
எழுதி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவேண்டுமென்பது
நோக்கமன்று. ஆகவே, ஆய்வினை ஏற்றுக்கொள்வீர்கள் ;
அவ்வாறே வேண்டிக்கொள்கிறோம்.
அழகு+ இரு + இ என்று பிரித்து அழகிரி என்று முடித்து,
அழகிருப்பவர் எனினும் ஆகும்; ஆனால் அதனினும்
சிறந்த முடிபினை எட்ட மேலும் ஆய்வோம்.
அழகு என்ற சொல்லில் அழ என்பதே முதனிலை ஆகும்.
கு என்பது விகுதியே ஆகும். ஆனால் இவ்விகுதி பெயர்ச்
சொல் அமைப்பிலும் வினைச்சொல் அமைப்பிலும் வருவது. வினைச்சொல்லில் வருதற்கு எடுத்துக்காட்டு: பழகு (பழகுதல்),
மூழ்கு (மூழ்குதல் ) எனக் காண்க.
எனவே அழ என்ற முதனிலையும் மலை என்று பொருள்படும்
"கிரி" என்ற கிளவியும் இணைந்ததே அழகிரி என்ற பெயர்.
இஃது விகுதிகெடுத்துப் புணர்த்திய சொல் ஆகும். இப்பெயரை
வேறு விதமாகச் சொல்வதென்றால் " அழகுமலை" என்னலாம்.
கிரி என்பது மலை.
கிரி என்பது திரிசொல். குன்று என்பது (சிறிய) மலை. இது
இடைக்குறைந்து குறு என்றாகி, குறு > கிரி என்று திரிபுற்றது.
குறு என்ற அடியினின்று பல சொற்கள் தோன்றியுள்ளன. குறி,
குறை என்பவை தொடர்புற்றவை.
அறிக. மகிழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.