ஊர்மக்களைப் பிணைக்கைதிகள் ஆக்கியது:
ஓய்வதும் இல்லையே தீவிர வாதிகளே
நாய்களே போலும் நடமாடித்----தாய்பிள்ளை
அப்பன் அணுக்கனினி எப்பா லவரையும்
ஒப்பப் பிடித்திருத்து வார்.
அரும்பதவுரை:
ஓய்வதும் - நிறுத்துவதும்; அணுக்கன் - உறவினன்;
எப்பாலவர் = ஆடவர் பெண்டிர் இருபாலாரையும்;
ஒப்ப - வேறுபாடின்றி; பிடித்து இருத்துவார் - வன்மை
காட்டிப் பிணைக்கைதிகள் ஆக்கிக்கொள்வர்.
படையினர் காவலதிகாரி தியாகம்:
படைஞரும் காவலரும் பாவமுயிர் தந்து
நடைபெற்ற போரில்தம் நாட்டாரைக் காத்தே
உடைக்கும் உயரணிக்கும் ஓரேற்றம் உய்த்தார்
கிடைப்பில் தியாகம் இது.
அ-ரை
படைஞரும் - இராணுவத்தினரும்; காவலரும் - காவல்
துறையினரும்; பாவம் - இரங்கத்தக்கவர்கள்; உயிர்தந்து -
தியாகங்கள் செய்து; உடைக்கும் - தாம் அணிந்த
சீருடைக்கும்; உயர் அணிக்கும் - தம் போற்றலுக்குரிய
படையணிக்கும்; ஓர் ஏற்றம் உய்த்தார் - சிறப்பைத் தேடித்
தந்தனர்; கிடைப்பு இல் - அரிய; தியாகம் - ஈகம்.
தொற்றுநோய்க் காலத்திலும் சண்டையா ?
கொரனாநோய்த் தொற்றிது குன்றாப் பரவல்
இரவென்றும் நாளென்றும் பாரா ----- நரகரால்
இத்தகு சண்டைகள் ஏற்படலும் வெட்கமே
எத்துணைக் காலமிது போம்.
அ-ரை:
குன்றாப் பரவல் - குறையாமல் பரவும் நிலை(யில்);
நாள் - பகல்; பாரா - பாராத; நரகரால் - தீயோரால்;
வெட்கமே - நாணத்துக்குரியது; போம் - நடைபெறும்?
கொரனாவுக்குத் தமிழ்ப்பெயர் " மகுடமுகி".
மடையர்கள் தொகைக்கென்ன பஞ்சம் ----- அட
மாறாத இந்நிலைமை காணாத கண்ணும்,
படைதரும் வீர்ர்தமைத் தாக்கும்----- ஒரு
பாழான தீவிர வாதத்தைக் காணின்,
விடைகண்டு வெதும்புமே நெஞ்சம் ----- தம்பி
வேறென்ன ஊறாவ தூருக்குள் என்றும்.
படையினர் ஐவர் மரணம்: செய்தி (சொடுக்குக.)
https://www.livemint.com/news/india/army-colonel-major-among-5-others-killed-in-j-k-s-handwara-terrorist-attack-11588477923676.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.