கொரனா நோய் குறைந்து நலம் சிறந்தமைக்கு வாழ்த்து.
ஏறு முகம்கண் டிருப்போர் வதைத்த
வீறு மிகுநோய் முடியுரு நுண்மி
சீறு விரைவைச் சிதைத்தசிங் கப்பூர்
ஆறு உறழ்மூன் றனைத்தும் பெறுமே.
ஏறுமுகம் கண்டு --- எண்ணிக்கையில் கூடிவந்து,
இருப்போர் வதைத்த --- குடிவாழ்நரைத் துன்புறுத்திய,
வீறு மிகுநோய் --- உறுதியுடன் பற்றுதிறமும் மிக்க நோயான
முடியுரு நுண்மி --- கொரனா வைரஸ் நுண்மி,
சீறு விரைவை ---- எதிர்த்துக் கிளம்பும் வேகத்தை,
சிதைத்த சிங்கப்பூர் --- தடுத்து மாற்றிய சிங்கப்பூர்,
ஆறு உறழ்மூன்று --- பதினெட்டுப் பேறுகளையும் (பாக்கியங்கள்),
அனைத்தும் பெறுமே --- எல்லாவற்றையும் பெற்று உயரும்.
முன் கூறிய 16 செல்வங்கள் ஒரு நாட்டுக்கு ஏற்ற
மாற்றங்களுடன் அமைவதுடன், நிலையான ஆட்சியையும்
ஊழலற்ற அமைச்சர் பெருமக்களையும் அடைந்து
ஓங்குக என்றவாறு.
என்று சிங்கையை வாழ்த்துகிறது இக்கவியின் வரிகள்.
வாசித்து மகிழ்வீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.