இனி அபத்தம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.
இதிலிருப்பவை இரண்டு உள்ளீட்டுச் சொற்கள்.
அவி + அற்று என்னும் இரண்டையும் மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.
இந்த அபத்தமென்னும் திரிசொல் அதன் முந்துவடிவத்தில் அவத்தம் என்று இருந்தது. வகர பகரப் போலியைப் பின்பற்றி இது பிற்காலத்தில் அபத்தம் என்று திரிந்துவிட்டது. வகரம் பகரமாவதை > 1. வகு > பகு 2. வசந்த > பசந்த் முதலிய வற்றால் அறியலாம். பகர வகரப் போலிகள் இந்திய மொழிகள் மட்டுமின்றிப் பிறமொழிகட்கிடையும் காணக்கூடியவை. ( Not language-specific). இத்திரிபு பல இடுகைகளிற் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.
அவியாகி அற்றுப்போவது அவத்தம். அற்று என்ற செந்தமிழ் வடிவம் பேச்சுமொழியில் அத்து என்று வரும்.
அன்றியும் சொல்லமைப்பில் இது காணக்கிட்டுவதே ஆகும். பல்+ து > பற்று > பத்து என்ற எண்ணுப்பெயர் காண்க. ஒன்பதின்பின் எண்ணிக்கை பலவாகிவிட்டதென்று நினைத்த தமிழன், பல் (பல) + து ( ஆனது)( ஆயின)
என்ற சொல்லை உண்டாக்கிக்கொண்டான். ஆயிரம் என்ற சொல்லின் அமைப்பையும் கண்டுணர்க. பல்+ து = பற்று > பத்து . ஒருபஃது, இருபஃது என்ற சங்ககாலச் சொல்வடிவங்களையும் நினைத்துக்கொள்க. இன்னும் தொற்று > தொத்து, சிற்றம்பலம் > சித்தம்பலம் முதலியவும் அறிக. உறவு அத்துப்போய்விட்டது என்ற சிற்றூர்ப் பேச்சும் உணர்க.
அவத்தம் > அபத்தம்.
இதன் பொருள் பயனற்றுவிட்டது என்பதே. இதன் ஏனைப் பொருள்விரிகள் யாவும் இம்மூலக் கருத்தினின்று பெறப்பட்டன. ஏற்புடையவாறு பொருளுரைத்துக்கொள்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.