நூதனம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
உகரச் சொற்களிற் சில நுகரத் தொடக்கமாகத் திரியும். இதற்கு எளிதான உதாரணம் உங்கள் > நுங்கள் என்பதாகும். இதனைப் போலி என்னும் திரிபு வகை என்னலாம்.
உகரச் சுட்டடிச் சொல்: உங்கள் என்பது, முன்னிலைக் கருத்தை உடையது. இதில் திரிந்த நுங்கள் என்பதும் அக்கருத்தைத் தழுவியதே ஆகும். இதன் முன் வடிவுகளாகிய உம் > நும் என்பவும் அன்னவே.
ஒரு காலத்தில் நூல் என்பது புதுமைப் பொருள். பஞ்சிலிருந்து நூற்க அறிந்தகாலை அது பெரும்புதுமை. நூதனம். நூல் > நூ( ல் ) > நூ +து + அன் + அம். இனி வேறொரு வழியில்:
ஊ, ஊன் என்பன முன்னிருத்தல் காட்டும் சொற்கள். சுட்டு.
ஊ > உ ( உகரச்சுட்டு) முதனிலை குறுக்கம். பொருள் மாற்றமில்லை.
ஊ > ( ஊ + து + அன் + அம் ) > ( நூ + து + அன் + அம் )
பொருள்களை முன் வந்தவை, பின் வந்தவை, பின் வந்து புதுமையானவை என்று பகுத்துக்கொண்டால் நூதனமானவை அல்லது புதுமையானவை முன்னிருந்து வியப்பினையும் விளைத்துக்கொண்டிருக்கும்.
இதிலிருந்து வியப்புக்குரிய புதுவரவே நூதனம் என்பதை அறிய ஆறறிவு போதும்.
கொம்பில் நுனியே முன்னிற்பது அதுவே இறுதியில் வந்தது.மாற்றுச்சொலவு வேண்டின் அடியிலிருந்து புதிதாக வெளிவந்ததே நுனி
அதிலிருந்து:
நுன் > நுனி.
நுன் > நூ + து + அன் + அம்.
முகிழ்த்துப் புதுமையாய் முன்னிருப்பது.
நுன் > நு (கடைக்குறை)
நு > நூ ( முதனிலைத் திரிபு, நீட்சி )
நுவலுதல் என்ற வினைச்சொல் புதுமையாய் அல்லது புதிதாய் ஒன்றை முன் வைப்பது, வாய்வழியாக. இதுவும் தொடர்புடைய உருவாக்கமே.
ஊது என்பது உள்ளிருந்து ( தொண்டையிலிருந்து ) வாய்வழி வெளிக்கொண்ர்தல். இக்கருத்து பின் விரியும். ஊது > நூ(து) எனக்காண்க.
மனிதன் எள்ளை அறிந்து அதைப் பயிராக்கியது முதுபழங்காலத்தில். அப்போது அது ஒரு புதுமையாய் இருந்தது. ஆபரணம் செய்ய அறிந்து அதை அணிந்தகாலம் அவன் புதுமையே கண்டான். யானையைக் கண்டபோதும் புதுமைதான். இந்தப் புதுமைப் பொருள்கட்கு ப் பொதுச்சொல்லாய் " நூ " என்று சொன்னான். இசைபாட அறிந்தபோதும் அதற்கு ஒருவினைச் சொல்லைப் படைத்து நூக்குதல் என்றான் என்பதும் அறிக. புதிதாக சமைக்க அறிந்தபோது ( தீயைக் கண்டுபிடித்துச் சில காலம் சென்றிருக்கவேண்டும் ) அவிப்பதை நூத்தல் என்று சொன்னான். நூர்த்தல் என்பதும் ஒன்றைப் புதிதாகச் செய்தல்.
முதலில் நூலெழுதியவனும் நூற்க அறிந்தவனும் இவனே. இவை எல்லாம் மனித இனத்தால் கொண்டாடப்பட்ட கண்டுபிடிப்புகள். அவனிடம் பல கண்டுபிடிப்புகள். அவை எல்லாம் இன்று பழங்கதைகள் ஆய்விட்டன.
யாதென அயிர்க்காமல் வாதிடல் விட்டு நூதனம் அறிக.
அச்சுப்பிறழ்வுகள் திருத்தம் பின்னில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.