தொங்கு என்ற சொல்லில் தொம் என்பதே அடிச்சொல்.
தொம் + கு = தொங்கு.
தொங்கு(தல்) வினைச்சொல். தல் என்னும் விகுதி பெற்றால் விகுதி ஒழிய முன்னிற்பது வினை. வினை என்பது செய்கை. தொங்குதல் என்பது வினைக்குப் பெயராகிறது, இதனைத் தொழிற்பெயர் என்று இலக்கணியர் சொல்வர்.
தொம்பல்
இது தொம் > தொம்(பு + அல்) = தொம்பல் ஆனது. பு மற்றும் அல் என்பன விகுதிகள். இரு விகுதிகள் பெற்ற சொல் இதுவாகும். கலப்பையில் தொங்கிக்கொண்டிருக்கும் ( ஒட்டியிருக்கும்) மண் அல்லது சேறு.
(சேர்ந்துகொண்டிருப்பது சேர் > சேறு. ( இது வீர் > வீறு போன்றமைந்த சொல்). வைரஸ் என்ற சொல்லின் அடியும் இதுவாகும். விரைவு என்பது ஓர் உள்ளாற்றலால் முடுகி அல்லது விரைந்து சென்றடைதலைக் குறிக்கும்.
இதைப்பின் தனியாக விளக்குவோம். இங்கு விர் > வீறு என்பதை மட்டும் ஒப்பிட்டுக் கொள்க.)
தொம் > தொம்பு > தொப்பு
தொப்பு தொப்பு என்று நனைந்துவிட்டோம் என்பது காண்க
தொப்பு - துணி நனைந்து தொங்கும்படியாக
தொப்பு > தொப்பை
தொப்பு > தொப்பி. ஒரு நடுப்பகுதி வெளிவந்த தலையணி.
தொப்பு > தொப்பூழ்.
தொம் என்பதற்கு தொ என்பது அடிச்சொல். ஆகவே மூலம்.
தொ > தொடு, ப > படு போல. இதைத் தனியாக விளக்கவேண்டும். தொடும்போது உங்கள் கை இருக்குமிடத்திலிருந்து நீட்டப்பெற்று எதையும் தொடுகிறது. நீள்வது வெளிவருவதே போன்றது. இருக்குமிடம் விட்டு வெளிவருவது.
தொடு > தொடை.
உடலைவிட்டு நீண்டு கீழாக வெளிவந்தது.
தொம் > தொம்தரவு. > தொந்தரவு. ( விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதுபோல ஒன்றைச் செய்து வருத்துவது ),
தொந்தி ( தொம் தி ) - வெளித்தள்ளித் தொங்குவயிறு.
விளக்கும்பொருட்டு ஒன்றை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களால் சொல்லநேரும். வெளித்தள்ளுதல் தொங்குதல் எல்லாம் அதே.
தொம்பைக்கூத்து, தொம்பைநாற்று இவை கூட்டுச்சொற்கள்.
அறிக மகிழ்க.
தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.