தொற்றுநோய் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது. அது பற்றி இம்மாதத் தொடக்கத்தில் யாமெழுதிய ஒரு கவிதை.
வீட்டி லடங்கிக் கிடமகனே மீ'றிடிலோ
மாட்டிக் கொளநேரும் நோய்த்தொற்றில் ---- மூட்டெளிதே
ஊகான் குறுங்குறுமி ஓங்கிற் றுலகெல்லாம்
வாகாரும் வாழ்வை உக.
மூட்டு எளிதே -- நோயணுக்கள் காய்ச்சல் முதலியவற்றை
மூட்டுதல் எளிதாகும்.
குறுங்குறுமி --சிறிதான கிருமி.
ஊகான் - சீனாவில் நோய் தொடங்கிய இடம்.
வாகாரும் - அழகான.
உக - விரும்பு.
வீட்டி லடங்கிக் கிடமகனே மீ'றிடிலோ
மாட்டிக் கொளநேரும் நோய்த்தொற்றில் ---- மூட்டெளிதே
ஊகான் குறுங்குறுமி ஓங்கிற் றுலகெல்லாம்
வாகாரும் வாழ்வை உக.
மூட்டு எளிதே -- நோயணுக்கள் காய்ச்சல் முதலியவற்றை
மூட்டுதல் எளிதாகும்.
குறுங்குறுமி --சிறிதான கிருமி.
ஊகான் - சீனாவில் நோய் தொடங்கிய இடம்.
வாகாரும் - அழகான.
உக - விரும்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.