2003 வாக்கில் saars என்னும் பெயரிய சளி மூச்சுத்திணறல்
நோய்நுண்மம் பரவியது. ஏறத்தாழ் 8000
மக்கள் பாதிப்பு உற்றனர். பாவம் 774 பேர் இறந்தனர். அதனினும்
மிக்க பாதிப்பே மீண்டும் மகுடமுகி 1 நோய்நுண்மிகளால் இன்றும்
வந்துள்ளது. பாதிப்பு இப்போது கடுமையானது: 78000+ பேர்
நோய்வாய்ப் பட்டுள்ளனர்.
வரலாற்றில் வந்ததுவே மீண்டும் வந்தது. அந்த உண்மையை
இந்தச் சில வரிகள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;
வாழ்க்கையிலே தோன்றியதே தோன்றும் யாண்டும்;
உரலுற்ற நெல்லதுவே பொருளாம் பின்னும்
உலகியலில் உண்மையிதே உணர்வீர் உள்ளீர்
விரலுற்ற புண்ணிடமே புண்ணாம் இன்னும்:
வேறுபடல் அrரிதென்பார் விரிவ றிந்தோர்.
1 மற்ற பெயர்கள்: முடியுருவினி, மகுடத்தோற்றினி
2 சிங்கப்பூரிலும் தொற்றியுள்ளது. ஆனால் பெரும்பாலும்
வெளியார் ஆவர்.
அரும்பொருள்
யாண்டும் - எப்போதும்.
உரலுற்ற - உரலில் குத்துவதற்கு இட்ட
பொருளாம் மீண்டும் - குத்துதலுக்குப் பொருளாகும் இன்னொரு
முறையும்.
உலகியலில் - உலக நடப்பில்
உள்ளீர் - மக்களே
விரலுற்ற - விரலில் பட்ட
புண்ணிடமே - புண் பட்ட இடமே
புண்ணாம் இன்னும் - மீண்டும் காயப்பட்டுப் புண்ணாகும்
வேறுபடல் - மாறிவருதல்
அரிது - மிகக் குறைவு
விரிவு - விளக்கம்.
மாற்றி வாசிப்பு:
வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்; என்பதை
வருமே மீண்டும் வரலாற்றில் வந்ததுவே என்று மாற்றியும்
இப்படியே ஆறு வரிகளையும் மாற்றி வாசித்தாலும்
பொருள்மாறாமல் வேறு சந்தம் தரும் வரிகள் இவை.

குறிப்புகள் History repeats itself
( a saying in English )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.