விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர். இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!
இப்போது அதைக் கூறுவோம்.
விழுமிய புலம் = சிறந்த நாடு. விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.
இதைச் சுருக்கி விழுபுலம் எனல்.
அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.
விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன. இன்னும் இது ு சொற்றொடர்தான்.
விழுபுலம் > விபுலம். இப்போது ஒரு சொல்லாய் விட்டது. இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.
ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:
ஆ+ நன்று + அம் என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.
நன்று என்பது நல்+ து > நன்+து என்பதுதான்.
நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே. நல்+து = நற்று என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.
நன் து என்பது நந்து அல்லது நன்-து என்றும் வரலாம். முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன. சிந்து என்பதும் அதுபோல. சின்= சிறிய. து விகுதி. சில் > சின் ( ந் ). சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும் ல் -ந் ஆகும்.
நன்று - நற்று போல சிற்று என்றும் ஒரு சொல் உள்ளது. சில்+ து = சிற்று.
எனவே ஆனந்தம் என்பது ஆ + நல்(நன்) + து +அம் அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு. உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.
விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது பொருள்.
நாமும் ஆ+நன்+து+அம் காண்கிறோம்.
குறிப்பு
உறுபொருள் - original or etymological meaning
பெறுபொருள்- derived meaning
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.