பரவை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடல் என்று பொருள். கடல் மிகப் பரந்தது (பரப்பு உடையது ) என்று நம் முன்னோர்கள் 6எண்ணியதால் இச்சொல் மொழியில் எழுந்தது. இதேபோல் கடவுளும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவி நிற்பதாக உணரப்படுபவர் என்னும் கருத்தினால் அவர்க்குப் '"பரம்பொருள்" என்ற பெயர் ஏற்பட்டது. இதன் முதலாகிய பரம் என்பதும் "பரன்" என்று மாறி அக்கடவுளுக்கு ஆண்பாற் பெயரானது. இன்னும் பரம் என்பதே அன் விகுதி பெற்று பரம்+ அன் = பரமன் என்று அக்கடவுளையே குறித்தது.
மனிதர் உள்ளிட்ட மரம் செடி கொடி விலங்குகள் என எவற்றின்பாலும் அன்பும் அருளும் உடையவனாகிப் பரந்த நோக்குடன் வாழ்ந்தவன் : பர > பார் > பாரி எனப்பட்டான். ( முல்லைக்குத் தேர் கொடுத்தோன் )
கடலைக் குறிக்கும் பரவை என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லே மீனவரைக் குறிக்கும் சொல்லாம் "பரதவர்:" என்ற சொல்லும். மீன்விலைப் பரதவர் என்பதும் காண்க. இது பர + து + அ + அர் என்ற உள்ளீடுகளை உடைய சொல்லாகும். இதில் வல்லொற்று வரல்வேண்டும் என்று வாதிட்டாலும், அது பயனின்மை கருதிப் பின் குறைவுறும். அஃதன்றியும் பரத்தவர் எனின் பரத்துக்கு உரியோர் என்று பொருள்பட்டு பொருள் மயக்கம் விளைக்குமென்றும் அறிக. பரதவர் என்பதே ஏற்புடை வடிவம். [பரத்துக்கு = கடவுட்கு]
முப்புறமும் கடல் சூழ்ந்த --- கடல் நாகரிக ---- நாடு என்பதே பாரத நாடாயிற்று.
பரதவ மக்களின் நாகரிகத்தில் ஓங்கிய நாடே பாரத நாடு. பாரதம் என்பதும் அது. இம்மக்கள் அரசோச்சிய பண்டை நிகழ்வுகளை நினைவுகூர்வதும் மகாபாரதம் ஆகும்.
மறுபார்வை பி ன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.