இறந்துபோன மனிதனைத் தூக்கி, இடுகாட்டுக்குக் கொண்டு செல்வர், அல்லது சுடுகாடு கொண்டுபோவர். ஆகவே பிறர்கேட்பது: எத்தனை மணிக்குத் தூக்குகிறார்கள் என்பது. இறந்தபோது ஏற்பட்ட துன்பம் தூக்கும்போது மேலிடுகிறது,
தூக்கு > தூக்கு + அம் > துக்கம்.
நெடிலான முதலெழுத்து விகுதியேற்றுக் குறிலாகும்.
அரசு தூக்கிலிடும்போதும் தூக்கு என்ற சொல்லே வருகிறது. இங்கும் தூக்கு > துக்கம் என்றே ஆகிறது.
முதலெழுத்துக் குறுக்கம்:
இதற்கு இன்னோர் உதாரணம்: சா+ அம் = சவம். (பிணம்).
தோண்டு+ ஐ = தொண்டை எனினுமது.
இன்னும் வேண்டின் பழைய இடுகைகளில் காண்க.
துறத்தல் அடியாகப் பிறந்த துறக்கம் என்பதும் உயிர்துறத்தல் கருத்தில் றகரம் இடைக்குறைந்து துக்கம் என்றாகும். ஆதலின் இஃது ஓர் இருபிறப்பி ஆகும்..
தக + அனல் = > தக அனம் > தகனம்.
தகுந்தபடி அனல்படுத்துவது, அல்லது தகத்தக என்னும் அனலில் இடுவது.
பிழைபுகின் திருத்தம்பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.