சூது, வாது முதலிய சொற்களை முன்னர் விளக்கியதுண்டு எனினும் அவை ஈண்டில்லை ஆதலின் மீள்பதிவு செய்வோம்.
சூது என்பது ஓர் இடைக்குறைச் சொல்.
சூழ்தல் என்பது ஆலோசித்தல். சூது விளையாடும்போது ஆலோசித்தே விளையாடவேண்டும்; இன்றேல் தோல்வியைத் தழுவ நேரிடும். ஆதலின் சூழ்தல் என்ற வினையடியாய்ப் பிறந்தது இச்சொல்.
சூழ் + து = சூழ்து > ( ழகர ஒற்று வீழ்ந்து ) சூது.
சூழ்ச்சி என்ற சொல்லமைப்பும் காண்க. சூழ் - திட்டமிடு.
இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த இன்னொரு சொல், எடுத்துக்காட்டு:
வாழ்த்தும் இயம் > வாழ்த்து இயம் > வாழ்த்தியம்.
வாழ்த்தியம் > வாத்தியம்.
வாழ்த்துவது என்பதை முன்னர் படிப்பறியார் வாத்துவது என்பர்.
பிற்காலத்தில் இச்சொல் வாழ்த்தாத இயங்களையும் உட்படுத்தி விரிந்தது.
ஆனால் வாத்து என்ற பறவையின் பெயர் வாய் என்பதனடிப் பிறந்தது.
வாய் > வாய்த்து > வாத்து. இதில் யகர ஒற்று வீழ்ந்தது.
இதுபோலும் இன்னொன்று: வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.
வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர்.
உப அத்தியாயி > உபாத்தியாயி என்பது வேறு. குழப்பலாகாது.
வாயினால் பரப்பப்படும் கெடுதல் : வாய் > வாய்து > வாது.
வாயினால் செய்யப்படுவது வாதம் : வாய் > வா > வாதம்.
வாய்ப்பட்டியை வாப்பட்டி என்பர் சிற்றூரார். படிப்பறிவு மிக்க ஊர்களில் இப்போது திருத்திக்கொண்டிருப்பர்.
சூது வாது என்பன இடைக்குறைகள். அறிக.
தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.