இது
சில ஆண்டுகட்கு முன் எழுதிய
கவிதை.
பழைய
கையெழுத்துப் படிகளை
எடுத்துக்கொண்டிருந்தபோது
கிடைத்தது.
ஒரு
விபத்தில் நண்பர் இறந்துவிட்ட
துயர நாளில் பாடப்பெற்றது.
பழங்காலத்தில்
இது போலும் பாடலை "
கையறு
நிலை"
என்பர்.
"மரணம்
வருவது காப்பதில்லை ===
நம்
மரணப்
படைக்கலன் மாற்றியுள்ளோம்;
கரணம்
தப்பின் மரணமென்பார் ===
அந்தக்
காரியம்
மாறுமோ யாண்டுமில்லை.
"
விபத்தில்
இறந்தார் எவரெனினும்
===நெஞ்சு
விம்மும்
துயரால் விடைபகர்வோம்;
சிவத்தில்
இணைந்தார் இன்னவர்கள்
== இவர்(கள்)
சீர்சால்
உலகின் முன்னவர்கள்.
உந்துருளிகள்
(மோட்டோர்பைக்
) ஓட்டுவோர்
அன்புகூர்ந்து கவனமாய்
இருங்கள். அதுவே
நீங்கள் எங்களைப் பிரியாமல்
இருக்கும் வழியாகும்.
மரி
+ அணம்
= மரணம்.
விழு+
பற்று >
வி+
பத்து
>விபத்து.
விழுந்து
சாதலைக் குறித்த பழயை புனைவு
இன்று பொதுப்பொருளில்
வழங்குகிறது.
என்ன ஆச்சு
என்பதை மலையாளத்தில் "
எந்து பற்றி
? " என்பர்.
விபத்து
என்பது நம்மைப் பற்றிக்
கொள்ளும் நிகழ்வு.
குறிப்பு:
முன்னைய
இடுகையில் ஒரு தப்பு இருந்து
அதைத் திருத்த முனைந்தபோது
மென்பொருள் ஒத்துழைக்கவில்லை.
அதுபின்
திருத்தப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.