கூகிள் நிறுவனம் கூடுதல் அச்சேவை
பாகினது பாத்திரம் ஆங்குதர ---- ஆகினவே
உட்புகுந் துள்ளன ஓங்க நுகர்தலும்
கட்பகிர்ந் தன்ன கருத்துகள்---- கொட்புறலும்
நற்பயன் பெற்றோமந் நாள்.
பெற்ற பயன் நினைவு கொள்ளுதல் பற்றிய கவி.
வெண்பா. நேரிசை.
பொருள் ( உரை)
கூகிள் நிறுவனம் கூடுதல் சேவை - கூகிள் ப்ளஸ்
என்ற மென்பொருட் சேவை;
பாகினது - காய்ச்சின பாகினுடைய
பாத்திரம் - உண்கலம்
ஆங்கு தர - விரைவாகத் தேடிக் கொணர்ந்து கொடுக்க;
உட்புகுந்து - வலைத் தளத்தினுள் நுழைந்து;
உள்ளன ஓங்க நுகர்தலும் - இருக்கும் இடுகைகளை
விரிவாக அனுபவித்தலும்;
கட் பகிர்ந்தன்ன -- கண்களே பாகுபடுத்தி எடுத்துக்கொள்ளுதல்
போலவே;
கருத்துகள்: எண்ணி எழுதிய பலவும்;
கொட்பு உறலும் - மேற்கொள்ளுதல் மிகுதலும் ஆன;
நற்பயன் - நன்மைகள் விளைந்திடுதலை;
பெற்றோம் அந்நாள்: முன்னாளில் பெற்றும் மகிழ்ந்தோம் அல்லோமோ?
பெற்றோம் என்றபடி.
கூகிள் சேவை, பாகுப் பாத்திரம் கொணர்ந்தளித்தலுக்கு உவமையாக
இங்கு சொல்லப்பட்டது.
மறுபார்வை செய்யப்பெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.