பிளாயர்.
இந்த
இரு சொற்களும் வழக்கில்
உள்ளவையாகும்.
இவற்றுள்
பிளாயர் என்பது ஆங்கிலச்
சொல்.
பிளாயருக்கு
நண்டுக் கொடுக்குப் போல
விரிந்து ஒரு பொருளைப் பிடித்து
க்கொள்ளும் திறம் உள்ளது.
விரிதல்
என்பதும் பிளத்தல் என்பதும்
ஒன்றுதான்,
நுட்ப
வேறுபாடுகளைப் பொருண்மையில்
உட்படுத்தாவிடில்.
இந்த
ஆங்கிலச் சொல்லைத் தமிழ்க்
கண்ணாடி கொண்டு நோக்கின்,
பிளத்தல்:
பிள
+
ஆய்
+
அர்
என்று பிரித்து அருத்தம்
கூறிவிடலாம்.
(மனிதன்
நாவொலிகட்கு இயற்கையில்
எப்பொருளும் இல்லை.
ஒலிக்குப்
பொருள் உட்புகுத்தப்படுகிறது.
அதனால்
சொல்லுக்குப் பொருள் கண்டு
கொள்கிறோம்.
உட்புகுத்தலாவது
அருந்தும்படி செய்தல்.
அல்லது
"
அருத்துதல்
"
( அருந்து
என்பதன் பிறவினை ).
எடுத்துக்காட்டு:
பொருந்து
>
பொருத்து;
அருந்து
>
அருத்து.
ஆகவே
பிள என்பது இணைந்து நிற்கும்
ஒன்று பிரிதலைக் குறிக்கிறது.
பிள
என்பது பிரி என்பதும் ஓரடியினின்று
வருவன.
இதை
இங்கு விளக்கவில்லை.
பிள
:
பிளத்தல்
என்பதன் அடியாம் ஏவல் வினை.
ஆய்
:
வினை
எச்சம்.
அர்
:
விகுதி.
தமிழிலும்
இது விகுதியாய் வருதல் உண்டு.
“செக்கரில்
தோன்ற"
( புறம்:
16) = சிவப்பாய்த்
தோன்ற.
வழக்கு:
செக்கர்
வானம்.
இதில்
அர் விகுதி இறுதிநிலை ஆதல்
காண்க.
தக்கர்
-
தண்ணீர்
கொள்கலம். தண்ணீர் தங்கவைக்கும் (ஊற்றிவைக்கும் ) பெரிய ஏனம்.
தங்கு
+
அர்
=
தக்கர்
(
வலித்தல்
விகாரம்).
தேர்தலில்
அவர் தன் இடத்தைத் தக்க
வைத்துக்கொண்டார்.
தக்க
=
தங்க.
இவற்றிலிருந்து
அர் விகுதி பயன்பாடு அறிக.
பிளாயர்
என்பது தமிழன்று.
ஆனால்
பல ஆங்கிலச் சொற்களுக்கும்
தமிழ் மூலம் இருத்தல் காணலாம்.
ஏன்
என்பதை நீங்கள் ஆராயலாம்.
தமிழ்
உலக மொழியுமாம்.
அதன்
மூலங்கள் எங்கும் சிதறிக்
கிடக்கின்றன. ( மூலங்கள் எனின் மூலச் சொற்களும் சொல்லடிகளும் ).
மூல
ஐரோப்பியத்தில் ப்லெக்
என்பதிலிருந்து இது வருதலைக்
கூறுவர்.
இலத்தீன்
பிளக்காரே என்பதும்
காட்டப்பெறுகிறது.
தமிழ்-
பிளத்தல்
காட்டப்பெறவில்லை.
இதுபோலும்
பல சொற்களை ஆராய்ந்து ஒரு
பத்து ஆண்டுகளின் முன் ஒருவர்
இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
யாம்
சேமித்து வைத்தவை அழிந்தன.
இத்தகு
சொற்களை நீங்கள் ஆய்வு
செய்யலாம்.
குறடா:
இனி
குறடா என்ற சொல்லுக்கு வருவோம்.
( இது
கட்சிக் குறடா அன்று.)
குறடா
என்`கின்ற
ஓர் ஆயுதம்.
இது
குறு குறுகு என்ற அடியினின்று
போதருவதாகும்,
குறு
(
குறுமை,
குறுகுதல்
அதாவது அகலம் குறைதல் ).
சில
சொற்கள் காண்போம்.
குறு
>
குறள்.
( ஈரடிப்
பாவகை)
குறு
>
குறுவை
(
குறுகிய
காலத்தில் விளைச்சல் தரும்
ஒரு நெல்வகை).
குறு
>
குறுக்கை
(
சிலுவை)
( குறுக்கு
நெடுக்கில் அடிக்கப்பட்டு
இணைப்புடைய இரு சட்டங்கள்
அல்லது கட்டைகள் .
குறு>
குறுணி.
( குறுகிய
அளவை,
ஓர்
அளவை ).
குறு
>
குறுகல்
:
அகலக்
குறைவு
குறு
>
குறுக்கம்
(
அகலம்
குறைத்தல்,
அகலம்
குறைவானது )
குறு>
குறுங்கண்
:
சன்னல்,
சாளரம்.
குறு
>
குறுங்கண்ணி
:
( கொண்டைமாலை)
குறு
>
குறுஞ்சிரி
:
புன்னகை
குறு>
குறுணை
(
குறு
நொய் )
: உடைந்த
அரிசி.
குறு
>குறுநணி:
அண்மையில்.
குறு
>
குறுமுனி:
அகத்தியனார்.
இங்கு
தரப்பட்டவை குறு என்பதனடிப்
பிறந்த சில சொற்கள்.
இன்னும்
பல உள.
பொருளும்
முழுமையாகத் தரவில்லை.
இவை
வெறும் மாதிரிகளே.
இப்போது குறடாவுக்கு வருவோம்.
குறு
>
குறடா.
குறு
+
அடு
+
ஆ.
இதில்
ஆ விகுதி.
நிலா
என்பதில்போல.
குறுக்கப்பட்டு
கொடுக்குகள் போல் அடுத்துப் (பிடிக்கும்) ஒரு
பிடிகருவி.
ஆகவே
"
பிளாயர்"
ஆகும்.
பிளாயர்
என்ற ஆங்கிலத்தைப் பேசாமல்
குறடா என்`க.
அறிந்து
மகிழ்வீர்.
பிழைகள் புகின் திருத்தம் பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.