வாக்கியங்களில் வரும் ஆற்றொழுக்கினைப் பின்பற்றாமல் மறுதலையாகச் சொற்களைப் போட்டுச் சொல்லமைப்பை மேற்கொள்ளுவது ஒன்றும் புதிய உத்தி அன்று.
அல்+ திணை = அஃறிணை என்பதிலே திணை அல்லாதது என்ற வாக்கியத்தில் வரும் சொற்களைத் தலைமாற்றிப் போட்டுப் புனைந்திருத்தலைக் காணலாம். பிற்காலத்தில் இந்த உத்தியை மேலும் மேலும் கையாண்டனர் என்பதே உண்மையாகும். எடுத்துக்காட்டு:
கருத்து வாக்கியம் : தாய்க்குப் பின் தந்தை
இதைத் தலைமாற்றி:
பின் + தாய் > பிதா
பின் என்பதில் உள்ள 0னகர ஒற்று விலக்கப்பட்டது: எடுத்துக்கொண்டது: பி என்ற முதலெழுத்து மட்டுமே.
பின் > பி. ( கடைக்குறை).
தாய் > தா ( கடைக்குறை ).
அஃறிணை என்ற மறுதலை அமைப்பைப் போல இன்னொரு சொல்லமைப்பு:
கருத்து வாக்கியம்: தாரம் தப்புதல். ( வாழ்க்கைத் துணையை இழத்தல் )
இதைத் தலைமாற்றி:
தப்புதல் தாரம்.
தப்பு + தாரம் = தப்புத்தாரம்
மெய்யெழுத்துக் களைதல்:
தபுதாரம்.
இறுதி மகர ஒற்று களையப்படவில்லை.
இதைத் தொல்காப்பியனார் பயன்படுத்தியுள்ளார். அவரே புனைந்ததா என்று தெரியவில்லை.
கருத்து வாக்கியம்: அது அம்மா ( பணிவினால் அஃறிணைப் பயன்பாடு)
மா + (அ)து > மாது. ( அம்மையார்).
இன்னும் சில: (தலைமாற்று இல்லாதவை).
அகத்திலே இருக்கவேண்டியது: இரு+ அக(ம்) + சி + அம்= இரகசியம்.
அவிழ்க்கும் இரு கைகள் உடைய மேலணி: இரு + அவிழ் + கை > இரவிக்கை.
ழகர ஒற்று நீக்கம். இரு அவிழும் கைகள் உள்ள உடை.
கருத்து: விழுமிய புலம். இதைப் பார்ப்போம்.
சுருக்கினால் விழுபுலம்.
இதில் தலைதிருப்பு உத்தி எதுவும் கையாளாமல்:
விபுலம்.
புலம் என்பது நிலம் காட்சி என்ற பல்பொருளொரு சொல்.
விபுலம் என்பது அதன்படியே பல பொருள் தரும்.
விழுமிய புலம் - சிறந்த காட்சி என்றும் பொருள்படும்.
கெட்டுப் புன்மையாகியாகிவிட்ட நிலைமைக்கு ஒரு சொல்.
சொல்: நபுஞ்சகம்.
நலிபு உச்சு அகம்.
நலிபு :> நபு. ( இடைக்குறை ) அல்லது நவு(தல்) > நபு வகர பகர மாற்றீடு.
உச்சு > உஞ்சு ( மெலித்தல் ). இலக்குக்குச் செல்லுதல். வினை: உச்சுதல்.
அகம் : உள்ளதாதல் குறிப்பு.
நபு உஞ்சு அகம் > நபுஞ்சகம்.( பேடித்தன்மை)
இவ்வமைப்பில் சொற்கள் தலைமாற்று ஏற்படவில்லை.
நண்பர் > நபர். இடைக்குறை. இந்த இடைக்குறை மூலமாக நட்புக்குறிப்பு
விலகிற்று.
திருத்தம் பின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.