முன்னர் ஓர் ஏரியைப் பற்றிப் பாடிய போது:
வெள்ளி உருக்கித் தெளித்த போர்வையோ ---- இங்கு
விரிந்த ஏரி காட்டும் நீரினில்,
துள்ளி எழுந்து விழும் மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்து வந்த(து) ஊக்கமே.
என்ற வரிகளில் கருத்து வெளிப்பட்டது.
நேற்றுக் காலையில் சிங்கப்பூரில் கொஞ்சம் மழை. அது கண்டு ஒரு
கவிதை தோன்றியது. அதுவே இது:
எங்கிருந்தோ எடுத்து நீரை
இங்கு வந்து தெளித்திவ் வூரை
நுங்குட் கொண்ட நாவுபோலச்
சிங்கலின்றிக் குளிர வைத்தாய்.
சிங்கலின்றி - குறைவின்றி.
ஊர்கள் மேலே அலைந்தலைந்தே
ஒவ்வோர் துளியாய் விழுங்கிப்
பாரை வள மிக்கதாக்கி
யாரைக் காதல்கொண்ு செய்தாய்.
உன்மனத்துள் மீட்டும் வீணை
ஊர்க்குள் ஒருத்தி இருக்கிறாளே
என்மனத்துள் மேகம் நீயே
இணைந்துகொஞ்சி இருப்பதென்ன?
வெள்ளி உருக்கித் தெளித்த போர்வையோ ---- இங்கு
விரிந்த ஏரி காட்டும் நீரினில்,
துள்ளி எழுந்து விழும் மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்து வந்த(து) ஊக்கமே.
என்ற வரிகளில் கருத்து வெளிப்பட்டது.
நேற்றுக் காலையில் சிங்கப்பூரில் கொஞ்சம் மழை. அது கண்டு ஒரு
கவிதை தோன்றியது. அதுவே இது:
எங்கிருந்தோ எடுத்து நீரை
இங்கு வந்து தெளித்திவ் வூரை
நுங்குட் கொண்ட நாவுபோலச்
சிங்கலின்றிக் குளிர வைத்தாய்.
சிங்கலின்றி - குறைவின்றி.
ஊர்கள் மேலே அலைந்தலைந்தே
ஒவ்வோர் துளியாய் விழுங்கிப்
பாரை வள மிக்கதாக்கி
யாரைக் காதல்கொண்ு செய்தாய்.
உன்மனத்துள் மீட்டும் வீணை
ஊர்க்குள் ஒருத்தி இருக்கிறாளே
என்மனத்துள் மேகம் நீயே
இணைந்துகொஞ்சி இருப்பதென்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.